இபிஎஸ் திட்டம் ஒரு போதும் எடுபடாது! வேடிக்கை பார்க்க மாட்டோம்! ஓபிஎஸ் தரப்பு மிகத் திட்டவட்டம்!
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் திட்டம் ஒரு போதும் எடுபடாது என்றும் சூழ்ச்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் உள்ள இளைஞர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருப்பதாக அவரது தீவிர ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு நாவடக்கம் தேவை என்பதையும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவிச் சண்டை
அதிமுகவில் எழுந்துள்ள பதவிச்சண்டையால் அக்கட்சி படு பாதாளத்தை நோக்கிச் சென்றுவிடுமோ என பதைபதைக்கிறார்கள் அடிமட்டத் தொண்டர்கள். அதிமுகவில் அடுத்தது என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்புடன் தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் செய்தி தொலைக்காட்சிகளை ஓடவிட்டுக் கொண்டு காத்திருக்கின்றனர் கடைக்கோடி ரத்தத்தின் ரத்தங்கள்.

ஓபிஎஸ் உத்தரவு
இந்தச் சூழலில் நேற்று முதல் மாறி மாறி இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் கொளத்தூர் கிருஷ்ணமுர்த்தி அளித்த பேட்டியில், ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தும் இன்னும் ஏன் எடப்பாடி பழனிசாமி அவரை அழைக்கவில்லை என வினவியுள்ளார். ஓபிஎஸ் உத்தரவுக்காக தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் காத்திருப்பதாக கூறினார்.

போலி கையெழுத்து
மேலும், ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் போலி கையெழுத்து வேண்டுமானால் போடலாம் அதையும் எடப்பாடி பழனிசாமி செய்தாலும் செய்வார் என ஒரே போடாக போட்டார். இப்படி இரண்டு தரப்பினருக்கும் இடையே வார்த்தைப் போர் நாளுக்கு நாள் முற்றிவருவதால் இது எதில் முடியும் என்பது விடை தெரியாத வினாவாக உள்ளது.

எடப்பாடி தரப்பு
இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் பேட்டிகள் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுவரை மவுனம் காத்து வரும் எடப்பாடி பழனிசாமி இன்று மாலையோ அல்லது நாளையோ மவுனம் கலைப்பார் எனத் தெரிவிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications