10 நிமிஷம் பேசணும்.. கால்கடுக்க காத்திருந்த ஓபிஎஸ்.. ஸ்டாலினுடன் வந்த ஆளுநர்.. அடுத்து நடந்த சம்பவம்
சென்னை: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை கூட்ட தொடரின் போது ஆளுநர் ஆர். என் ரவியை சந்திக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நீண்ட நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இரண்டு நாட்களுக்கு முன் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக மொத்த கூட்டமும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது.
ஆளுநர் ஆர். என் ரவி உரை, முதல்வர் ஸ்டாலினின் பதில் உரை, கேள்வி பதில் நேரம் உள்ளிட்ட நிகழ்வுகள் மட்டுமே அவையில் நடைபெற்றது.இந்த நிகழ்வுகள் சட்டசபையில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதல்நாள் ஆளுநர் உரையுடன் அவை தொடங்கியது.

காத்திருந்த ஓ பன்னீர்செல்வம்
இந்த நிலையில் சட்டசபையில் நடந்த சம்பவம் ஒன்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் நாள் கூட்டத்தில் கலைவானர் அரங்கத்தில் உரையாற்றிவிட்டு ஓய்வு அறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளும் கட்சி உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியோடு இருந்தார். அப்போது ஆளுநரை சந்திக்க ஓபிஎஸ்சும் வேலுமணியும் விரும்பியிருக்கிறார்கள். அவரிடம் சில முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்ய இவர்கள் விரும்பியதாக கூறப்படுகிறது.

ஆளுநர் ஆர். என் ரவி
முக்கியமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது, சட்டசபை நிகழ்வுகள், ஆளுநர் உரையில் இடம்பெற்ற சில விஷயங்கள் குறித்து ஆளுநரை சந்தித்து பேச ஓபிஎஸ்சும் வேலுமணியும் விரும்பியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆளுநரை சந்திக்க சென்றபோது, முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் துரைமுருகனும் ஆளுனருடன் பேசிக் கொண்டு இருந்தனர். இதனால் இந்த சந்திப்பு முடிந்ததும் தங்களுக்கும் சந்திப்பு நடத்த நேரம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்து இருவரும் வெளியே காத்திருந்தனர்.

காத்திருப்பு
ஆனால் முதல்வரும், ஆளுனருடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்துள்ளனர். இதனால் ஓபிஎஸ்சும் அங்கு கால் கடுக்க நீண்ட நேரம் நின்றதாக கூறப்படுகிறது. முதல்வர் வெளியேறியதும் அறைக்குள் செல்லலாம் என அவர்கள் காத்திருக்க, முதல்வர் ஸ்டாலினுடன் பேசிக்கொண்டே ஆளுநர் அறையைவிட்டு வெளியே வந்து விட்டார். வெளியே வந்தவர் நேராக லிப்ட்டுக்கு செல்ல, அப்போது, ஓபிஎஸ் காத்திருப்பதை கவர்னரிடம் அவரது செக்ரட்டரி சொன்னார்.

ஓபிஎஸ் ஆளுநர் சந்திப்பு
உங்களை பார்க்க இருவரும் வந்துள்ளனர்.. நீண்ட நேரமாக இருவரும் காத்திருக்கிறார்கள் என்று கூறினார். அவர்களை வரச்சொல்லுங்கள் என்ற கவர்னர். ஓபிஎஸ்சும் வேலுமணியும் வரும் வரை லிப்ட்டுக்கு வெளியே நின்றார் கவர்னர். ஓபிஎஸ்சும் வேலுமணியும் ஓடோடி வந்து கவர்னருக்கு பொக்கே கொடுத்தனர். இருவரிடமும் நலம் விசாரித்த கவர்னர், எப்படி இருக்கீங்க.. எதுவும் பிரச்சனையா.. சொல்லுங்கள் என கேட்டார்.

10 நிமிடம் பேச வேண்டும்
அதற்கு உங்களிடம் 10 நிமிடம் பேச வேண்டும் என்று ஓபிஎஸ் கூறி இருக்கிறார். ஆனால் இப்போது நேரம் இல்லை, அவசரமாக செல்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. நீங்கள் இருவரும் ராஜ்பவனுக்கு வாங்களேன்.. நாம் அங்கேயே பேசலாம்' என சொல்லி விட்டு சென்றிருக்கிறார் ஆளுநர் ஆர். என் ரவி. இதனையிடையே, எப்போது வரலாம் என ராஜ்பவன் அதிகாரிகளிடம் இரண்டு நாட்களாக கேட்டு வருகிறார் ஓபிஎஸ்.. ஆனால் இப்போது வரை அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications