90 வயதில் வாக்களிக்க வந்த.. பாடகி சுசீலாவுக்கு ஏமாற்றம்! அதிகாரிகளின் பதிலால் அப்செட்!
சென்னை: பாடகி சுசீலா நேற்று வாக்களிக்க வந்திருந்த நிலையில், அவரது வாக்கை ஏற்கனவே முத்திரை குத்தி அனுப்பிவிட்டதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இதனால் சுசீலா மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கிறார்.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க சுசீலா வந்திருக்கிறார். தற்போது இவருக்கு 90 வயதாகிறது. இருப்பினும், உடல்நல பாதிப்புகளை பொருட்படுத்தாமல், ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்திருக்கிறார்.

சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குத் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக அவர் சென்றபோது, உங்கள் வாக்கு ஏற்கனவே முத்திரை குத்தி அனுப்பப்பட்டுவிட்டது என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
"இத்தனை ஆண்டுகளாகத் தவறாமல் வாக்களித்து வருகிறேன். இந்த வயதிலும் ஆர்வத்துடன் வந்த எனக்கு, அதிகாரிகளின் பதில் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இது பற்றி யாரிடம் புகார் அளிப்பது என தெரியவில்லை" என்று சுசீலா வேதனை தெரிவித்திருக்கிறார்.
சுசீலா மூத்த குடிமகள் என்பதால், அவரிடமிருந்த தபால் வாக்கு பெற, சில நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். ஆனால், தான் நேரில் வந்து வாக்களிப்பதாக அவர் கூறியிருக்கிறார். இருப்பினும் வாக்குச்சாவடிக்கு வந்த பின்னர், அவரது வாக்கு ஏற்கெனவே முத்திரை குத்தி அனுப்பப்பட்டுவிட்டது என்று அதிகாரிகள் சொன்னதால் அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
இவரது வாக்கை அதிகாரிகள் போட்டுவிட்டார்களா? அல்லது.. வெறுமென முத்திரை மட்டும் குத்தி அனுப்பப்பட்டுவிட்டதா? என்பது தெரியாமல் சுசீலா அதிருப்தியடைந்திருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications