அதிமுகவில் பா வளர்மதிக்கு புதிய பதவி.. வைகை செல்வனுக்கு புதிய பொறுப்பு... ஓபிஎஸ் இபிஎஸ் உத்தரவு
சென்னை: அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் மற்றும் வர்த்தக அணிச் செயலாளராக வெங்கட்ராமன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அதிமுகவில் பல்வேறு நிர்வாகிகள் புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதிமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் இனி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது :

வைகை செல்வன் விடுவிப்பு
கழக இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திருமதி பா. வளர்மதி அவர்களும், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் முனைவர் வைகைச்செல்வன் அவர்களும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகளாகவும்; சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

மகளிர் அணி
கழக மகளிர் அணி நிர்வாகிகள்:
செயலாளர்- திருமதி பா. வளர்மதி, (B.A.) அவர்கள் (கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்)
இணைச்செயலாளர்- திருமதி மரகதம் குமாரவேல், B.A., M.L.A., அவர்கள் (செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)

வர்த்தக அணி
கழக இலக்கிய அணி:
செயலாளர்- முனைவர் வைகைச்செல்வன் , M.A., B.L, D.Ed., D.Lit., Ph.D.. அவர்கள் (கழக செய்தித்தொடர்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்)
கழக வர்த்தக அணி நிர்வாகிகள்:
செயலாளர்- திரு. V.N.P.வெங்கட்ராமன், B.E., Ex. M.L.A., அவர்கள் (ஆலத்தூர் கிழக்கு பகுதிக் கழகச் செயலாளர் சென்னை புறநகர் மாவட்டம் )

அதிமுக
திரு. A.M.ஆனந்தராஜா அவர்கள் (சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர், தூத்துக்குடி தெற்கு மாவட்டம்) கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.'

முக்கிய பொறுப்பு
அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த பா வளர்மதி, வைகை செல்வன் ஆகிய இருவருக்கே புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் ஈரோடு மாவட்டத்தை கட்சியின் அமைப்பு ரீதியாக பிரித்து பொறுப்பு வழங்கப்பட்டது .
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications