பொற்கொடிக்கு சப்போர்ட்டுக்கு போன பா.ரஞ்சித்! திருமாவளவனுக்கு என்ன சொன்னாருனு பாருங்க!
சென்னை: தலித் செயற்பாட்டாளரும், இயக்குநருமான பா.ரஞ்சித், மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். பொற்கொடி அதிமுக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேநேரம், திமுக கூட்டணியில் விசிக தலைவர் திருமாவளவன் களமிறங்கியிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரஞ்சித், திருமாவுக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
அதிமுக, திமுக இரண்டும் திராவிட கட்சிகளாக இருந்தாலும், தற்போது இரு கட்சிகளும் பயணிக்கும் பாதைகள் வெவ்வேறானவையாக இருக்கின்றன. இடஒதுக்கீடே வேண்டாம் என்று பேசும் வலதுசாரிகள் நிரம்பியிருக்கும் பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. அந்த கட்சியின் சார்பில்தான் பொற்கொடி களமிறங்குகிறார்.

பொற்கொடியின் நிலைப்பாடு
நாளை, இவர் எம்எல்ஏ ஆகிறார் என்றால், இடஒதுக்கீடு, தலித் உரிமைகள் குறித்து முன்வைக்கும் கருத்துக்களை அக்கட்சி தலைமை ஏற்குமா? என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜக வரவேற்குமா? அப்படியான கருத்துக்களை சட்டமாக பாஜக உடன் வந்து நிற்குமா? என்பது எல்லாம் மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், பொற்கொடிக்கு பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்? என இதர தலித் செயற்பாட்டாளர்கள், இடதுசாரிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
மீண்டும் திருமாவளவன்
ஒருபுறம் இப்படி இருக்க மறுபுறம், காட்டுமன்னார்கோயில் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மூடநம்பிக்கை ஒழிப்பு, இடஒதுக்கீடு ஆதரவு, பெண் விடுதலை இதற்கான கள போராட்டங்களில் ஈடுபடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து திருமாவளவன் களம் காண்கிறார். இவருடைய போராட்டங்களை இந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அங்கீகரிக்கின்றன. ஆதரவு தெரிவிக்கின்றன, பெரும்பான்மையான கட்சிகள் உடன் வந்து போராடுகின்றன.
பா.ரஞ்சித்தின் நிலைப்பாடு
இப்படி இருக்கையில் பொற்கொடிக்கு மட்டும் ஆதரவு தெரிவித்துவிட்டு, திருமாவை பா.ரஞ்சித் டீலில் விட்டு விடுவரோ என்று கேள்விகள் எழுந்தன. ஆனால், பா.ரஞ்சித் திருமாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட போவதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது.
என்ன சொன்னார் ரஞ்சித்
தமிழகத்தின் சமகால அரசியல் சூழலையும், சமூகநீதி சார்ந்த எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவு முக்கியமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழக சட்டமன்றத்தில் சாதி ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அவரது குரல் வலிமையாக ஒலிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.
ஏணி சின்னத்துல ஒரு குத்து..
ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவன் மகத்தான வெற்றியடைய வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அண்ணன் அவர்களது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி" என்று கூறியிருக்கிறார் பா.ரஞ்சித்.
இதை பார்க்கும் போது தென்ன மரத்துல ஒரு குத்து.. ஏணி சின்னத்துல ஒரு குத்து என்கிற காமெடிதான் நினைவுக்கு வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications