பாரிவேந்தருக்கு அடுத்த ஷாக்.. ஐஜேகே கட்சியின் பொதுச்செயலாளர் திடீர் ராஜினாமா.. காரணம் இதுதான்
சென்னை: ஐஜேகே எனும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் சிட்டிங் எம்பியாக பெரம்பலூர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் அவருக்கு அடுத்த அதிர்ச்சியாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர். இவர் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு திமுக கூட்டணியில் இருந்து விலகினார்.

இதையடுத்து நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பாரிவேந்தர் களமிறங்கினார். அதேபோல் அவரை எதிர்த்து அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு அமோக வெற்றி பெற்றார். அருண் நேரு 6,03,209 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 2,14,102 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். சிட்டிங் எம்பியாக களமிறங்கிய பாரிவேந்தருக்கு 3வது இடம் தான் கிடைத்தது. அவர் 1,61,866 ஓட்டுகள் பெற்றார்.
இந்த தேர்தல் தோல்வியை தொடர்ந்து தான் பாரிவேந்தருக்கு அடுத்த அதிர்ச்சி கிடைத்துள்ளது. அதாவது அவரது கட்சியில் பொதுச்செயலாளராக இருந்த ஜெயசீலன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தரை வெற்றி பெற வைக்க ஜெயசீலன் பணியாற்றினார். ஆனால் லோக்சபா தேர்தலில் ஜெயசீலனுக்கு 3வது இடம் தான் கிடைத்தது.
இந்நிலையில் தான் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெயசீலன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக
ஐஜேகே பொதுச் செயலாளர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐஜேகே தோல்வியுற்றதற்கு முழு பொறுப்பேற்று கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications