அமெரிக்காவின் திமிரை பாருங்க! பாகிஸ்தான் ராணுவத்தை கொண்டாடும் யுஎஸ்! இந்தியாவின் ராஜதந்திர சறுக்கல்
சென்னை: தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.. பாகிஸ்தான் படைகள், அரசு இதில் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமெரிக்கா பாராட்டி உள்ளது.
கடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென பாகிஸ்தான் நாட்டு தலைவர்களை புகழ்ந்து பேச தொடங்கி உள்ளார்.
டிரம்ப் பேசும்போது, "பாகிஸ்தானில் நல்ல தலைவர்கள் உள்ளனர். இதை நான் சொல்வது சிலருக்கு பிடிக்காது, ஆனால் அதுதான் உண்மை. பாகிஸ்தான் தலைவர்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. நான்தான் போரை நிறுத்தினேன்.. ஆனால் யாரும் எனக்கு பாராட்டுத் தெரிவிக்கவில்லை. இந்த பெரிய போரை தடுத்ததற்கான அமெரிக்காவின் பங்கை இந்தியா மதிக்கவில்லை," என்றார்.
பாகிஸ்தானுக்கு மீண்டும் பாராட்டு
இந்த நிலையில் அமெரிக்க ராணுவ ஜெனரல் குரில்லா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவுகளை ஒரு கோணத்தில் மட்டும் பார்க்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். ஜெனரல் குரில்லாவின் இந்தக் கருத்து, இந்தியாவின் வெளியுறவுத்துறைக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்த இந்தியா முயன்று வருகிறது.

பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் பார்வை
இந்தியாவின் இந்த தீவிர முயற்சிக்கு இடையில்தான்.. ஜெனரல் மைக்கேல் குரில்லா பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாராட்டி பற்றிப் பேசியுள்ளார். பாகிஸ்தான் தீவிரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஐ.எஸ்.ஐ.எஸ்.-கோரசானுக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுகிறது. இந்தியாவுடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தானுடனான உறவை துண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. இரு நாடுகளுடனான உறவுகளின் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு அணுக வேண்டும். இரண்டு நாட்களுக்கு இடையிலான மோதலை.. இரண்டு துருவங்கள் போல பார்க்கக் கூடாது. இந்தியா - பாகிஸ்தான் இரண்டு துருவங்கள் கிடையாது.
இதை நினைவில் கொள்ள வேண்டும். அதோடு பாகிஸ்தான் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது, என்று கூறி உள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு பாராட்டு
ஜெனரல் குரில்லா, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீரை வெகுவாகப் பாராட்டினார். ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் இராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ்-கோரசான் குழு, அமெரிக்காவிற்குள் தாக்குதல் நடத்த முயலும் தீவிரவாதக் குழுக்களில் மிகவும் ஆபத்தான குழுவாக உள்ளது. இதை வளர விடாமல் தடுக்க பாகிஸ்தான் தேவையான முயற்சிகளை செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு நெருக்கமாக பாகிஸ்தான்
பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருக்கமாகி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ்-கோரசான் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கொன்றுள்ளது. அமெரிக்காவுடன் உளவுத்துறை தகவல்களைப் பரிமாறிக்கொண்டதன் மூலம், ஐந்துக்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.-கோரசான் உயர் மட்டத் தலைவர்களை பாகிஸ்தான் கைது செய்துள்ளது.
முகமது ஷரீபுல்லா என்பவர் 2021-ஆம் ஆண்டு காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடையவர். இந்தத் தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் 160 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதியைத்தான் பாகிஸ்தான் கைது செய்தது. ஜெனரல் ஆசிம் முனீர் தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குற்றவாளியைக் கைது செய்த தகவலைத் தெரிவித்ததாகவும், அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா ஜெனரல் குரில்லா தெரிவித்தார்.
இதன் காரணமாகவே தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.. பாகிஸ்தான் படைகள், அரசு இதில் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமெரிக்கா பாராட்டி உள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!











Click it and Unblock the Notifications