பள்ளிக்கரணை மக்களின் பல வருட ஏக்கம்.. நாராயணபுரம் ஏரி பகுதியில் நடந்த நம்ப முடியாத மாற்றம்
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை ஆய்வு செய்தார். அந்த ஏரி தென் சென்னையின் முக்கியமான ஏரியாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரியின் ஆக்கிரமிப்பு தான் தென் சென்னையின் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில் இந்த முறை 850 மீ. நீளத்தில் 1,100 கன.அடி வெள்ள நீரை வெளியேற்றும் திறனுடைய இரண்டு கண் கொண்ட கூடுதல் வடிகால்வாய் அமைக்கப்பட்டிருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
வேளச்சேரி பள்ளிக்கரணை பகுதியில் பல ஆண்டுகளாக ஏற்படும் வெள்ளப்பாதிப்புக்கு பலரும் நினைப்பது போல் பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரி மட்டும் காரணமல்ல.. உண்மையில் சென்னை நகரின் தென் பகுதியில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் அருகில் அமைந்துள்ள நாராயணபுரம் ஏரி தான் மிகவும் ஆபத்தானது. துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையே இந்த ஏரியின் நடுவில் செல்கிறது.

இந்த ஏரி ஆரம்பத்தில் சுமார் 64 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலை அமைத்தல் போன்ற காரணங்களால், இதன் பரப்பளவு மிகவும் குறைந்துவிட்டது. செல்வாக்குமிக்க நபர்களின் ஆக்கிரமிப்புகளால் நாராயணபுரம் ஏரிக்கு வரும் கால்வாய்களும் மிகவும் சுருங்கிவிட்டது. இதுவும் வெள்ளத்திற்கு காரணமாக இருந்து வருகிறது.
நாராயணபுரம் ஏரி என்பது ஒரு ஏரி அல்ல, பல்லாவரம், குரோம்பேட்டை, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், சுண்ணாம்பு கொளத்தூர் உள்பட பல பகுதிகளில் உள்ள ஏரிகளின் இணைப்பு பாலம் ஆகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை உருவாக்கும் 16 ஏரிகளை ஒன்றோடு ஒன்று இணைத்து இறுதியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் செல்ல வழிவகை செய்யும் ஏரி தான் நாராயணபுரம் ஏரி ஆகும். இன்னும் தெளிவாக சொல்வது என்றால், பல்லாவரம் ஏரி, நன்மங்கலம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரி ஆகியவற்றின் உபரி நீர் கால்வாய்கள் வழியாக வந்து நாராயணபுரம் ஏரியை வந்தடையும்.
நாராயணபுரம் ஏரி முழுவதுமாக நிரம்பும்போது, அதன் உபரி நீர் வடிகால் கால்வாய் வழியாகப் பாய்ந்து, இறுதியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சென்றடையும். அங்கிருந்து உபரி நீர் ஒக்கியம் மடுவு (Okkiyam Maduvu) மற்றும் பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கோவளம் கழிமுகத்தை அடைந்து கடலில் கலக்கிறது.
நாராயணபுரம் ஏரியும் அதன் நீர்வழிக் கால்வாய்களும் அமைந்துள்ள இடம் என்பது சென்னையின் ஐடி நிறுவனங்கள் அதிகம் அடைந்துள்ள பகுதியாகும். ரியல் எஸ்டேட் உச்சத்தில் உள்ள பகுதியாகும். விமான நிலையம், ரயில் நிலையம், வேளச்சேரி, துரைப்பாக்கம், கிண்டி என எல்லாமே கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது. இதனால் செல்வாக்கான நபர்களின் துணையோடு ஆக்கிரமிக்கப்பட்டு பின்னால், விற்கப்பட்டது. இந்த நகர்புற ஆக்கிரமிப்புகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் நீர்வழிப் பாதைகள் சுருங்கி, ஏரியின் நீர் தேக்கும் திறன் குறைந்து பாதிப்பு அதிகமானது.
கனமழை காலங்களில், குறிப்பாக 2015 மற்றும் 2023 மிக்ஜாம் புயலின்போது, நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்ததாலும், உபரி நீர் வெளியேற முடியாமல் போனதாலும், நாராயணபுரம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, சுண்ணாம்பு கொளத்தூர் போன்ற அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் பெரும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வெள்ளத்தைத் தடுக்கவும், ஏரியின் நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்கவும், தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் இணைந்து ₹145 கோடி மதிப்பிலான பல்வேறு புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக ஏரிக்கரையை வலுப்படுத்துதல், சுற்றுச்சுவர் கட்டுதல், நடைபாதை அமைத்தல், ஆழப்படுத்துதல், நீர்த்தாமரை மற்றும் களைச்செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டது.
அதேபோல் நாராயணபுரம் ஏரியில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்குத் தண்ணீரைச் சீராகக் கொண்டு செல்ல ₹44 கோடி மதிப்பில் புதிய வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளும் நடந்தது. நாராயணபுரம் ஏரி தென் சென்னையின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும், வெள்ள மேலாண்மையில் முக்கியப் பங்காற்றும் ஒரு நீர்நிலையாகவும் இருந்த காரணத்தால், வெள்ளத்தை தடுக்க புதிய வடிகால் தேவைப்பட்டது. தற்போது நல்ல மாற்றம் அங்கு நடந்துள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், தென் சென்னை பகுதியில் வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கில், நாராயணபுரம் ஏரியில் இருந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை ரூ.44 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளது.
குறிப்பாக, 850 மீ. நீளத்தில் 1,100 கன.அடி வெள்ள நீரை வெளியேற்றும் திறனுடைய இரண்டு கண் கொண்ட கூடுதல் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் வழக்கமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளில், இந்தமுறை நீர் ஏதும் தேங்காமல், தண்ணீர் வெளியேறி வருவதை நேரில் பார்வையிட்டோம். மேலும், நாராயணபுரம் ஏரியின் மற்றொரு பகுதியில் நடைபெற்று வருகிற தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினோம்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications