ஐயோ.. உங்க ஆதார் கார்டு செயலற்று போயிடுமே.. பான் கார்டு எங்கே?.. இன்னைக்கு விட்டால் அவ்ளோதான்..உஷார்
சென்னை: பான் கார்டையும் ஆதார் அட்டையையும் இணைக்க இன்றே கடைசி நாள் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.. அவ்வாறு இணைக்காவிட்டால் என்னாகும் தெரியுமா?
நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று, பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன.. காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும்.
பான் கார்டு: நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.. அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளைய தினம், ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.. பான் அட்டையை இதில் கட்டணமில்லாமல் இணைக்கலாம்.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும்.
ஏற்கனவே, நிறைய காலக்கெடு இதற்காக விதிக்கப்பட்டிருக்கிறது.. ஆனால் இந்த இணைப்பு குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், பலரும் இதை செய்யவில்லை...

அதனால்தான், ஜூன் 30ம் தேதி வரை மறுபடியும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.. இப்படி கால அவகாசம் நீட்டிக்கப்படுவது இது ஐந்தாவது முறையாகும். இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும், ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஆதார், பான் கார்டை இணைப்பவர்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் இணைக்க வேண்டும்: வருமான வரிச்சட்டத்தின்படி, 2017ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி நிலவரப்படி பான் கார்டு வழங்கப்பட்ட அனைவருமே ஆதார் கார்டுடன் பான் கார்டை கட்டாயமாக இணைக்க வேண்டும்... ஜம்மு காஷ்மீர், அசாம், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள், அயலக இந்தியர்கள் (NRI), 80 வயதை தாண்டியவர்கள் இந்த இணைப்பு செய்ய தேவையில்லை..
விளைவுகள் என்ன: ஒருவேளை, இந்த இணைப்புகளை செய்யாவிட்டால், கணக்கு தொடங்குவதற்கு தேவையான முதன்மை ஆவணங்கள் என்பதால் வங்கிக் கணக்கைத் திறக்க முடியாது..
புதிய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பெறுவது சாத்தியமில்லை. பாஸ்போர்ட் பெறுவதற்கு பான் கார்டு கட்டாயம் என்பதால் வெளியூர் பயணம் செய்ய முடியாது.. மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்குவது ரூ. 50,000 அனுமதிக்கப்படாது.. ரூபாய்க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள். 50,000 எதையும் வாங்கவோ விற்கவோ முடியாது என்று வருமானவரித்துறை அறிவித்திருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications