இனி கிராம அளவிலும் மழை குறித்த அப்டேட்.. இந்திய வானிலை ஆய்வு மையம்.. எப்படி பார்க்கனும் தெரியுமா?
சென்னை: மாவட்ட வாரியாக மட்டுமே மழை குறித்த அப்டேட் வெளியாகி வரும் நிலையில், இனி பஞ்சாயத்து வாரியாக மழை குறித்த அப்டேட்டை தெரிந்துகொள்ள முடியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவ மழை காலத்தில் எப்போது மழை பெய்யும்... கனமழையாக இருக்குமா? அல்லது மிதமான மழையாக இருக்குமா? என்பது குறித்த அப்டேட்களை தினம் தோறும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. மாவட்ட அளவிலான அறிவிப்புகளை தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகினாலும் சரி.. புயல் உருவானாலும் சரி.. வானிலை குறித்த அப்டேட்கள் அவ்வப்போது மக்களுக்கு ஆய்வு மையத்தால் தெரியப்படுத்தப்படும்.
தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இந்த வானிலை குறித்த அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் காலநிலை மாற்றத்தால் எற்படும் பேரிடர்கள் பெருமளவில் குறைக்கப்படவும் இந்த வானிலை முன்னறிவிப்பு பெரிதும் உதவிகரமாக உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது 150 ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.

அதைக் கொண்டாடும் விதமாக இனி பஞ்சாயத்து அளவிலும் வானிலை முன்னறிவிப்பை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்ய உள்ளது. இந்த அறிவிப்புகள் ஆங்கிலம், இந்தி தவிர தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளில் கிடைக்க உள்ளது. நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை செல்போன்கள் மூலமே தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் எந்த ஊருக்கு வானிலை அறிவிப்பை தெரிந்து கொள்ள வேண்டுமோ அதன் பின் கோடு எண்ணை குறிப்பிட்டால் போதுமானது. மழை பற்றிய தகவல் மட்டும் இன்றி காற்றின் வேகம் எந்த அளவு இருக்கும். வெப்ப நிலை, ஈரப்பதம் உள்ளிட்ட வானிலை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருதுஞ்சய் மோஹபத்ரா கூறியதாவது:-
அடுத்த வாரம் முதல் பஞ்சாயத்து அளவிலான வானிலை முன்னறிவிப்புகளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்க இருக்கிறது. இது விவசாயிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். பருவமழை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை கணிசமாக குறைக்க உதவும். இந்தியாவின் தொழில் நுட்ப வல்லமை மூலம் பஞ்சாயத்து அளவிலான கணிப்புகளையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடும் ஆற்றல் சாத்தியமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications