பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு.. பீதியில் திரண்ட வாகன ஓட்டிகள்.. ஆந்திராவில் 400 பங்குகள் மூடல்
அமராவதி: ஆந்திராவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பீதி அடைந்து வாகன ஓட்டிகள் பலரும் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்தனர். இதனால், ஆந்திராவில் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார்களும் அணிவகுத்து நின்றன. திடீரென குவிந்த வாகன ஓட்டிகளால், ஆந்திராவில் பல்வேறு பங்குகளில் பெட்ரோல், டீசல் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 421 பங்குகள் மூடப்பட்டன.
ஈரான் - அமெரிக்கா போரின் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய போரினால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த வழியாகத்தான் நடப்பதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு வதந்தி
இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் சமையம் சிலிண்டர் விநியோகம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் கிடைப்பதில் இன்னமும் நெருக்கடி நீடிப்பதால் ஹொட்டல்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றன. இதற்கிடையே, பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு என அவ்வப்போதும் கிளம்பும் வதந்திகளால் எரிவாயு நிலையங்களில் வாகன ஓட்டிகள் திரளும் நிலையை சில நேரங்களில் காண முடிகிறது.
421 பங்குகள் மூடப்பட்டன
அந்த வகையில், ஆந்திராவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பீதி அடைந்து வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்தனர். இதனால், ஆந்திராவில் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார்களும் அணிவகுத்து நின்றன. டேங்குகளை புல் செய்து கொண்டதையும் பார்க்க முடிகிறது.
திடீரென குவிந்த வாகன ஓட்டிகளால், ஆந்திராவில் பல்வேறு பங்குகளில் பெட்ரோல், டீசல் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 421 பங்குகள் மூடப்பட்டன. மொத்தம் 4,501 பங்குகள் மாநிலத்தில் உள்ள நிலையில், 421 பங்குகள் தற்காலிக மூடப்பட்டன. எண்ணெய் விநியோயகம் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் பீதியில் வாங்கியதால் பல பெட்ரோல் பங்குகளில் செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறினர்.
ஒரே நாளில் 10 ஆயிரம் கிலோ லிட்டர் விற்பனை
மேலும், சாதாரணமாக ஒரு நாளைக்கு 6,330 கிலோ லிட்டர் பெட்ரோலும் 9,408 கிலோ லிட்டர் டீசலும் விற்பனை செய்யப்படும். எனினும், பற்றக்குறை ஏற்பட்டு இருப்பதாக கவலை அடைந்து தேவை அதிகரித்ததால், நேற்று ஒருநாளில் மட்டும் 10,345 கிலோ லிட்டர் பெட்ரோலும், 14,156 கிலோ லிட்டர் டீசலும் விற்றன. விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பால் எரிவாயு நிலையங்களில் ஸ்டாக்குகள் தீர்ந்தன. விநியோகம் அதிகரிக்கப்பட்ட போதிலும் பீதியில் அதிக அளவில் வாங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிக சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications