பார் சிறுத்ததோ படை பெருத்ததோ..எங்க அண்ணன் தளபதி! விஜய்க்கு நன்றி தெரிவித்த பரந்தூர் மக்கள்!
சென்னை: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிராக ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழுவில் பேசிய கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், பரந்தூர் மக்களை அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்திப்பேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் தங்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிய விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளனர் பரந்தூர் போராட்ட குழுவினர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கை காரணமாக புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை துவக்கியது. ஆனால் தங்கள் பகுதியில் விமான நிலையம் வரக்கூடாது என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தை ஆரம்பித்த விஜய் முதன்முதலாக கள அரசியலை பரந்தூரில் இருந்து தான் துவக்கினார். அப்பகுதியில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்து பேசி இருந்தார் விஜய். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் முதல் தீர்மானமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அந்த தீர்மானத்தை வாசித்த விஜய் பரந்தூர் பகுதி விவசாயிகளையும் பொதுமக்களையும் அழைத்துக் கொண்டு வந்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்திப்பேன் என கூறி இருந்தார். இந்த நிலையில் தங்களுக்கு ஆதரவு அளித்த விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறி இருக்கின்றனர் அப்பகுதி மக்கள். இது தொடர்பாக அவர்கள் அறிக்கையை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
அதில் பரந்தூர் புதிய விமான நிலைய திட்ட எதிர்த்து கடந்த மூன்று வருடங்களாக போராடி வரும் நிலையில் 'இந்த விவசாய மக்களை அழித்தாலும் ஏன் என்று கேட்க நாதியில்லை என்ற அதிகார ஆணவத்தில் மாண்புமிகு 'மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நில மதிப்பீட்டிற்கான அரசாணை வெளியிட்டு பாதிக்கப்படுகின்ற விவசாய மக்களின் வாழ்க்கையை அழிக்கின்ற செயலை செய்து வருகிறது
மக்களாட்சி என்றால் என்னவென்றே தெரியாத பண வெறி பிடித்த முட்டாள் அதிகாரிகளின் பேச்சை நம்பி மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு விவசாயத்தையும், பாரம்பரியமான குடியிருப்புகளையும் அழித்து சொந்த நாட்டில் நாங்கள் அகதிகளாக மாற்ற படும் அராஜகத்தை தொடர்ந்து கண்டித்து வரும் தமிழக வெற்றிகழக தலைவர் நாளைய முதல்வர் எங்கள் அண்ணன் தளபதி விஜய் அவர்கள் எங்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக உள்ளார் என்பதை நன்றியுணர்வோடு எண்ணி பார்க்கிறோம்.
தவெக முதல் மாநாட்டில் பரந்தூர்புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து தீர்மானம் வடித்தார் அண்ணன் தளபதி அவர்கள். தலைவர் தளபதி அவர்களின் முதல் அரசியல் பயணமாக பரந்துர் பகுதிக்கு வந்து உங்களை பாதுகாக்கும் அரணாக உங்களுடைய கிராம தேவதைகள் அருள்மிகு எல்லைஅம்மன். அருள்மிகு கொல்லமேட்டாள்அம்மன் ஆசியோடு உங்கள் வீட்டு பிள்ளையாக என்றும் இருப்பேன் என்று உறுதி கொடுத்தார்
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்ப்பு போராடும் விவசாய மக்களை தவெக தலைமை அலுவலகத்திற்க்கு அழைத்து இதுவரை எந்த தலைவரும் செய்யாத வகையில் தளபதி அவர்களின் கையால் அனைவருக்கும் தேனீர் சிற்றுண்டி அளித்து மலைக்க வைத்தார்.
இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பரந்தூர்புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் வடித்து பேசும் போது பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள், 1000 கணக்கான வீடுகளை அழித்து ஜனநாயக படுகொலை செய்யும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே 1000 நாட்களை கடந்து வாழ்வாதாரத்துக்காக போராடும் பரந்தூர் பகுதி விவசாயிகளையும் பொது மக்களை அழைத்து பேசி இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இல்லை எனில் நானே தலைமை ஏற்ற போராடும் விவசாய மக்களையும் பொது மக்களையும் தலைமை செயலகம் அழைத்து வருவேன்
அப்படி அழைத்து வரும் போது என்ன நடந்தாலும் நான் சந்தித்த தயார் என நெஞ்சுரத்துடன் ஆதரவு குரல் அளித்து வரும் தவெக தலைவர் அண்ணன் தளபதி அவர்களுக்கு பாதிக்கப்படுகின்ற பரந்தூர் பகுதி விவச பொதுமக்கள் சார்பாகவும் போராட்ட குழுவின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..
அண்ணன் தளபதி அவர்களே நீங்கள் ஆணையிடுங்கள் பரந்தூர் பகுதி விவசாய மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த விவசாயிகளும் பார் சிறுத்ததோ படை பெருத்ததோ என்று எண்ணுகிற ஓர் அணியாய் திரண்டு அரித்தாபட்டியை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துவோம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு.
மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே எங்கள் பைந்தமிழ் பாட்டன் வள்ளுவன்வாழ்மொழியை நினைவு படுத்துகிறோம்.
"இடிப்பாரை இல்லாத ஏமார மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்" எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications