பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்த அதிகாரம் அளித்த அரசாணை.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் பரந்தூர் விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்த மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,"காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மகாதேவி மங்களம் கிராமத்தில் எனக்கு 169 சென்ட் நிலம் இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பட்டா நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதில் என்னுடைய நிலத்தை கையகப்படுத்துவதாக விளக்க நோட்டீசை மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி எனக்கு அனுப்பி உள்ளார்கள். நிலத்தை கையகப்படுத்துவதற்கு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தும், அதை அவர் நிராகரித்துள்ளார். சிறப்பு வருவாய் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ராஜசேகர், "நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சிறப்பு வருவாய் அதிகாரி நோட்டீஸ் வழங்க அதிகாரமே கிடையாது. கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, அந்த அதிகாரம் மாவட்ட கலெக்டருக்குதான் உள்ளது" என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் சதீஷ் பெருமாள், மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரிக்கு இந்த அதிகாரத்தை வழங்கி 2021-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்த அரசாணையை தாக்கல் செய்திருந்தார். அந்த அரசாணையில், நிலத்தை கையகப்படுத்த சிறப்பு வருவாய் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. உடனே மனுதாரர் தரப்பு வக்கீல், ''இந்த அரசாணையிலும் விதிமீறல் உள்ளதால், இதை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்'' என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 2021-ம் ஆண்டு அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதித்து விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications