பராசக்தி vs பாஜக.. விஜய் ஒரே கல்லில் அடித்த இரண்டு மாங்காய்.. ஜன நாயகன் ரியல் ட்விஸ்ட்
சென்னை: ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டியது. சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.இனி சென்சார் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே படம் வெளியாகும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்த பின்னரே படத்திற்கு சான்றிதழ் கிடைக்கும் என்கிற நிலை உள்ளது எனினும் நீதிமன்றம் அனுமதித்தால் படம் வெளியாகும் என தெரிகிறது. இந்தவிவகாரத்தில் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால் விஜய்க்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது. இதன் காரணமாக, அந்த படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

ஏனெனில் நீதிபதிகள் நேற்று அளித்த தீர்பபில், "தணிக்கை சான்றிதழ் இல்லாமல் படத்தை வெளியிட முடியாது. அப்படியிருக்கும்போது, தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் முன்பே படத்தை வெளியிடும் நாளை எப்படி முடிவு செய்தீர்கள்?. இவ்வாறு முடிவு செய்து, வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என நீதித்துறைக்கு அழுத்தம், நிரப்பந்தம் கொடுக்கக்கூடாது.
பதில் மனு தாக்கல் செய்ய கூட அவகாசம் கொடுக்காத அளவுக்கு இந்த வழக்கில் என்ன அவசரம் உள்ளது?' என்று கேள்வி எழுப்பினார்கள். பின்னர், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்கள். இதனால் ஜனநாயகன் பொங்கலுக்கு வெளியாகாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது
இதனிடையே குருவியார் என்ற பெயரில் எக்ஸ்தளத்தில்செயல்படும் நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டு ரிவைசிங் கமிட்டிக்கு போக சொல்லியும் அங்கு போகாமல் நீதிமன்றத்திற்கு சென்றது ஏன்? பராசக்தி படம் ரிவைசிங் கமிட்டி சென்று இன்று சான்றிதழ் வாங்கியுள்ளது. அதேபோல ஜனநாயகன் பட குழுவும் சென்றிருந்தால் வெளியிடுக்கு முதல் நாள் சான்றிதழ் வாங்கி இருக்கலாம்.
ஆனால் விஜய் தீர்ப்பு சிந்தித்தது இதை வைத்து அரசியல் செய்யலாம். நம் படம் என்று வந்தாலும் வசூல் செய்துவிடும்.. காரணம் இது என் கடைசி படம்// இதை வைத்தே இந்த படத்தை பெரிய அளவில் ஓட்டி விடலாம் என்று எண்ணிய விஜய் தரப்பு. இந்தப் படத்தை வைத்து அரசியல் செய்ய தான் நீதிமன்றத்தை நாடியது..
ஏனென்றால் அங்கு சென்றால் தான் வழக்கு தாமதமாகும் படம் வெளிவர சிக்கல் ஏற்படும் இதனை வைத்து தனக்கு எதிராக அரசு உள்ளது என்ற பிம்பத்தை மக்களிடம் புகுத்தி இதன் வழியே ஒரு இலவச விளம்பரத்தையும் பெற்று நம் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துதான் நீதிமன்றத்தை நாடியுள்ளது ஜனநாயகன் பட குழு.
ஜனநாயகன் படத்திற்கு தடை வந்ததும், இதுவரை படக்குழுவில் இருந்தோ,ஏன் விஜயோ வாய் கூட திறக்கவில்லை.. ஏனென்றால் அவர்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்கா.. ஒன்று அரசியல், இன்னொன்று படத்திற்கு இலவச விளம்பரம்.. இதில் முட்டாளாக ஆக்கப்படுவது ஏமாந்த மக்களே.." இவ்வாறு நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications