இந்திய ரயில்வேயில் டிக்கெட் கேன்சலில் ஸ்கேம் நடக்குது.. அமைச்சரையே டேக் செய்து குமுறிய பயணி
சென்னை: வடமாநில ரயிலில் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளார் பெண் பயணி. ஆனால் ரயில் பல மணி நேரம் தாமதமாகவே வந்ததாம். அதாவது ரயில் 8 முதல் 10 மணி நேரம் வரை தாமதமாக வந்துள்ளது. இதனால் ரயில் டிக்கெட் முன்பதிவை அவர் ரத்து செய்துள்ளார். ரூ. 2176க்கு டிக்கெட் முன்பதிவு செய்த அவருக்கு வெறும் 1050 ரூபாய் தான் கிடைத்துள்ளது. இதனால் நொந்து போன அவர் ரயில்வே அமைச்சரை டேக் செய்து தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான டிக்கெட் புக்கிங் இணையதளம் என்றால் அது ஐஆர்சிடிசி இணையதளம் தான். ஐஆர்சிடிசியில் அக்கவுண்ட் உள்ளவர்கள் தான் மற்ற கூகுள், அமேசான், கன்பார்ம் டிக்கெட் உள்பட பல்வேறு ஏஜெண்டு தளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணி, ஒருவேளை தனது டிக்கெட்டை கேன்சல் செய்தால், கணிசமாக பணம் பறிபோகும்.

பொதுவாகவே ரயிலில் டிக்கெட் ரத்து செய்வதில் இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. அதில் முதல் விஷயம் - சார்ட் தயாரிக்கப்படுவதற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்வது.. இரண்டாவது - சார்ட் தயாரிக்கப்பட்ட பின் டிக்கெட்டை ரத்து செய்வது. இதில் எந்த முடிவினை நீங்கள் எடுத்தீர்கள் என்பதை பொறுத்தே உங்களுக்கு எவ்வளவு பணத்தைத் திரும்ப கிடைக்கும் என்பது தெரியும்.
பொதுவாக ரயில்கள் புறப்படுவதற்கு முன்பு, அதாவது ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் கட்டணம் ஓரளவு குறைவாவே போகும். அதாவது ஏசி முதல் வகுப்பு/எக்ஸிகியூட்டிவ் வகுப்பு - ரூ 240 கட்டணம் ஆகும். 4 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் கண்டிப்பாக சுமார் 1000 ரூபாய் போய்விடும். ஏசி 2 டயர்/முதல் வகுப்பு என்றால் ஒரு டிக்கெட்டிற்கு ரூ 200 பறிபோகும். ஏசி 3 டயர்/ஏசி சேர் கார்/ஏசி3 எகானமி என்றால், ஒரு டிக்கெட்டிற்கு ரூ 180 பறிபோகும். அதேபோல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி என்றால் ரூ 120 பறிபோகும். இரண்டாம் வகுப்பு உட்காரும் இருக்கை என்றால், ஒரு டிக்கெட்டிற்கு ரூ 60 கழிக்கப்படும். இதுதான் ரயில்வேயில் உள்ள நடைமுறை..
அதேநேரம் ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரம் முதல் 48 மணி நேர இடைவெளியில் நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்தால், டிக்கெட் தொகையில் 25 சதவீதப் பணம் பிடித்தம் செய்யப்படும். அதோடு ஜிஎஸ்டி சேர்த்து கழிக்கப்படுவது இயல்பான ஒன்றாகும். ஒருவேளை நீங்கள் 12 முதல் 4 மணி நேரத்துக்கு முன்பு கேன்சல் செய்தால், உங்கள் டிக்கெட்டின் 50 சதவீதப் பணம் பிடிக்கப்படும்.
ஆனால் பயணிகளுக்கான சார்ட் தயாரிக்கப்பட்ட பின்னர் கேன்சல் செய்தால் பணம் எதுவும் கிடைக்காது. ஒருவேளை ரயில் தாமதம் ஏற்பட்டதாக கூறி TDR பூர்த்தி செய்திருந்தால் ரீஃபண்ட் கிடைக்கும். அதேநேரம் பயணிகள் ரயிலைத் தவறவிட்டால் (ரயில்வேயின் தவறாக இருந்தால் மட்டும்) முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம்.
டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய நபர்கள் ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் டெபாசிட் ரசீதை (TDR ) தாக்கல் செய்ய வேண்டும். அந்தந்த வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் செலுத்திய வாடிக்கையாளரின் வங்கியில் பணத்தைத் திரும்ப கிடைக்கும். 5 நாட்களுக்குள் பணம் திரும்ப கிடைக்கும். இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம்.. தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பணம் திரும்ப கிடைக்காது..

சரி விஷயத்திற்கு வருவோம். ரயில் தாமதம் ஏற்பட்டால் டிடிஆர் பைல் செய்து டிக்கெட் பணத்தை முழுமையாக திரும்ப பெறலாம் அல்லவா... அப்படி செய்த பெண் பயணி ஒருவர் டிக்கெட் கட்டணம் பாதிதான் திரும்ப கிடைத்ததாம்.இதனால் அவர் இதுபெரிய மோசடி என்று குற்றம்சாட்டி, இந்திய ரயில்வே மற்றும் ரயில்வே அமைச்சரை டேக் செய்து குமுறியுள்ளார்.
பூமிகா என்ற டாக்டர் வெளியிட்ட பதிவில். ரயில்கள் 8-10 மணி நேரம் வரை தாமதமாக வருகின்றன. திருவிழாவிற்காக வீட்டிற்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்தேன், அதற்கு முந்தைய நாள் இரவே, ரயில் 8 மணி நேரம் தாமதமாக செல்வதாக நான் அறிந்தேன். அதனால், அந்த முன்பதிவை ரத்து செய்துவிட்டு வேறு ரயிலுக்கு முன்பதிவு செய்தேன். ஆனால் எனக்கு வெறும் 1050 ரூபாய் மட்டுமே திரும்ப கிடைத்தது.
உங்களில் எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியவில்லை, ஒரு ரயில் 3-4 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால், நீங்கள் TDR (டிக்கெட் டெபாசிட் ரசீது) பதிவு செய்து முழு பணத்தையும் திரும்பப் பெற முடியும். நான் அதைச் செய்தேன், ஆனால் நான் பணத்தைத் திரும்பப் பெறவில்லை. இந்த சூழ்நிலையில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த என்னுடைய தவறு தான் என்ன? இந்திய ரயில்வேயில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. உங்கள் பிரச்சினைகளையும் கூறுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications