கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் என்ன சார் நடக்குது.. எப்படி போவாம்.. புதிய சர்ச்சையால் புலம்பும் பயணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கத்தில் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்து நிலையத்தின் 1-வது நடைமேடையை மிக எளிதாக எட்டும் வகையில் இருந்த முக்கியமான அவசர கால பாதை அடைக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் டவுன் பஸ்கள் செல்ல தனி பேருந்து நிலையமும், விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னிபேருந்துகள் செல்ல தனி பேருந்து நிலையமும் இருக்கிறது. இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் இருந்து அவசர வழி அடைக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Passengers allege emergency walkway blocked at kilambakkam bus station

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பரில் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்ட போது கடும் சர்ச்சை எழுந்தது. ரயில் நிலையத்தை திறப்பதற்கு முன்பு பேருந்து நிலையத்தை திறந்தது, ஜிஎஸ்டி சாலையை கடக்க மேம்பாலம் அமைக்காமல் பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்தது, சென்னை மக்கள் ஊருக்குள் செல்ல 30 கிமீ தூரம் செல்ல வேண்டும், டவுன் பஸ் ஏறவே அரை கிமீ சுற்றி செல்ல வேண்டும், போதிய கடைகள் மற்றும் ஏடிஎம்கள் இல்லை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

அதேநேரம் பொதுமக்கள் எழுப்பிய பல்வேறு குறைகளை படிப்படியாக சரி செய்ய தொடங்கியது தமிழக அரசு. கிளாம்பாக்கத்தை பொறுத்தவரை 1 முதல் 5-வது நடைமேடை வரை தொலைதூரம் செல்லும் பஸ்களை இயக்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் அனுமதிக்கப்படுகின்றன.

மீதமுள்ள நடைமேடைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்தில் உள்ள மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ் நிலைய முகப்பு பகுதிக்கு சிறிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்து நடைமேடைகளுக்கு செல்லும் வகையில், நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் புறநகர் பஸ்கள் இயக்கப்படும் வழக்கமான பாதையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டால் 1-வது நடைமேடை வழியாக பஸ்கள் இயக்கப்படும் வகையில் அவசர கால பாதையும் இருக்கிறது. மாநகர பஸ் நிலையத்தின் வடகிழக்கு மூலையையொட்டி புறநகர் பஸ் நிலையத்தின் 1-வது நடைமேடைக்கு அந்த அவசர கால பாதை வழியாக பொதுமக்கள் செல்லும் வகையில் படிக்கட்டு ஒன்றும் சாய்தள வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இது பயணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த முக்கியமான அவசர கால பாதையானது இரும்பு தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ் நிலையத்தை எளிதாக சென்று அடைய முடியாத பயணிகள், புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றி மீண்டும் ரவுண்டு அடித்து வர வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ் நிலையத்தின் 1-வது நடைமேடைக்கு அவசர கால வழியில் சென்றால், புறநகர் பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு செல்லாமலே மக்கள் நேரடியாக புறநகர் பஸ்களை அடைய முடியும். எனவே கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த அவசர கால பாதையை தகரம் வைத்து அடைத்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை: கிளாம்பாக்கத்தில் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்து நிலையத்தின் 1-வது நடைமேடையை மிக எளிதாக எட்டும் வகையில் இருந்த முக்கியமான அவசர கால பாதை அடைக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் டவுஸ் பஸ்கள் செல்ல தனி பேருந்து நிலையமும், விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னிபேருந்துகள் செல்ல தனி பேருந்து நிலையமும் இருக்கிறது. இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் இருந்து அவசர வழி அடைக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பரில் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்ட போது கடும் சர்ச்சை எழுந்தது. ரயில் நிலையத்தை திறப்பதற்கு முன்பு பேருந்து நிலையத்தை திறந்தது, ஜிஎஸ்டி சாலையை கடக்க மேம்பாலம் அமைக்காமல் பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்தது, சென்னை மக்கள் ஊருக்குள் செல்ல 30 கிமீ தூரம் செல்ல வேண்டும், டவுன் பஸ் ஏறவே அரை கிமீ சுற்றி செல்ல வேண்டும், போதிய கடைகள் மற்றும் ஏடிஎம்கள் இல்லை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

அதேநேரம் பொதுமக்கள் எழுப்பிய பல்வேறு குறைகளை படிப்படியாக சரி செய்ய தொடங்கியது தமிழக அரசு. கிளாம்பாக்கத்தை பொறுத்தவரை 1 முதல் 5-வது நடைமேடை வரை தொலைதூரம் செல்லும் பஸ்களை இயக்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் அனுமதிக்கப்படுகின்றன.

மீதமுள்ள நடைமேடைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்தில் உள்ள மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ் நிலைய முகப்பு பகுதிக்கு சிறிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்து நடைமேடைகளுக்கு செல்லும் வகையில்,நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் புறநகர் பஸ்கள் இயக்கப்படும் வழக்கமான பாதையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டால் 1-வது நடைமேடை வழியாக பஸ்கள் இயக்கப்படும் வகையில் அவசர கால பாதையும் இருக்கிறது. மாநகர பஸ் நிலையத்தின் வடகிழக்கு மூலையையொட்டி புறநகர் பஸ் நிலையத்தின் 1-வது நடைமேடைக்கு அந்த அவசர கால பாதை வழியாக பொதுமக்கள் செல்லும் வகையில் படிக்கட்டு ஒன்றும் சாய்தள வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இது பயணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த முக்கியமான அவசர கால பாதையானது இரும்பு தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ் நிலையத்தை எளிதாக சென்று அடைய முடியாத பயணிகள், புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றி மீண்டும் ரவுண்டு அடித்து வர வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ் நிலையத்தின் 1-வது நடைமேடைக்கு அவசர கால வழியில் சென்றால், புறநகர் பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு செல்லாமலே மக்கள் நேரடியாக புறநகர் பஸ்களை அடைய முடியும். எனவே கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த அவசர கால பாதையை தகரம் வைத்து அடைத்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+