நள்ளிரவுக்கு பின் பஸ்களை கேட்டால் எப்படி? கிளாம்பாக்கம் பயணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அட்வைஸ்
சென்னை: கிளாம்பாக்கத்தில் இரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் சேவை இருக்கும் என்ற எண்ணத்தில் சிலர் வந்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் வந்து கொண்டு பேருந்துகளை கேட்பது என்பது எப்படி சாத்தியம் என்பதை அவர்களே உணர வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கிளாம்பாக்கத்திற்கு வாரம் ஒருமுறை நானும் அமைச்சர் சேகர் பாபுவும் வந்து கொண்டு இருக்கிறோம். இங்கு என்ன தேவை இருக்கிறது என்ற கருத்துக்களை கேட்டு அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை பற்றி சந்தேகம் எழுப்பப்படுகிறது.

அதிலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட செய்தியை தொடர்ந்து சொல்லி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிரச்சினை என்று பூதாகரம் ஆக்குகிறார்கள். இதை தெளிவுப்டுத்த விரும்புகிறேன். மதுராந்தகம் அருகே ஒரு விபத்து ஏற்பட்டதால் அந்த பேருந்துகள் குறித்த நேரத்தில் இங்கு வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டது. அன்று கூடுதலான பெருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
12 மணிக்கு மேல்: ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், வந்து சேர வேண்டிய பேருந்துகள் தாமதம் ஏற்பட்டதால் மக்கள் கோபம் அடைந்து மறியல் செய்தார்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரம் தான். காலையில் இருந்து இரவு வரை எந்த பிரச்சினையும் இன்றி போக்குவரத்து சென்று கொண்டிருந்தது. இன்னொரு புறம் இரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் சேவை இருக்கும் என்ற எண்ணத்தில் சிலர் வந்து விடுகிறார்கள்.
எல்லோரும் இல்லை.. 200 - 300 பேர் அந்த நேரத்தில் வந்து கொண்டு பேருந்துகளை கேட்பது என்பது எப்படி சாத்தியம் என்பதை அவர்களே உணர வேண்டும். ஏனென்றால் ஒரு செட்யூல் சர்வீஸ் என்பது இந்தந்த ஊருக்கு இத்தனை மணிக்கு கிளம்பும் என்பது தமிழ்நாடு முழுவதுமே இருக்கும் நடைமுறை. அந்த செட்யூல் படி பேருந்து இயங்குகிறதா என்றால் இயங்குகிறது. அதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
பயணிகள் உணர வேண்டும்: திருமண நாட்கள் போன்ற தொடர் விடுமுறை நாட்களில் கூடுதலாக பயணிகள் வரும் போது ஏற்கனவே திட்டமிடப்படாத கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அப்படி இயக்கும் போது ஒரு அளவிற்கு மேல் திடீரென்று இரவு 12 மணி.. 1 மணிக்கு வந்து நின்று கொண்டு பயணம் செய்ய பஸ்களை ஏற்பாடு செய்து கொடுக்க கோரிக்கை வைக்கிறார்கள். பேருந்துகளை கூட பக்கத்தில் உள்ள டெப்போக்களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த நேரத்தில் எங்கிருந்து டிரைவர் கண்டக்டர்கள் வருவார்கள் என்பதை உணர வேண்டும்.
காலம் காலமாக இப்படி தான்: இன்று நேற்று இல்ல.. காலம் காலமாக இரவு 11 மணிக்கு மேல் வாகனங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் 4 மணிக்கு மேல் போக்குவரத்து இருக்காது. காரணம் அதிகாலை நேரத்தில் பயணம் செய்வது ஆபத்தானது. விபத்துக்கள் அதிகம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பது என்பதால் அது தவிர்க்கப்படுகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு இனி பயணிக்க விரும்புபவர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications