கிளாம்பாக்கத்தில் 2-வது நாளாக அலைமோதும் பயணிகள்.. திரும்பிய பக்கம் எல்லாம் கூட்டம் தான்!
சென்னை: ஓணம் பண்டிகை, மிலாடி நபி, முகூர்த்த நாட்களை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் இந்த வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளதால், நேற்று சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் யணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் இன்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.
சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் அந்த வகையில், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறை நாளாகும். அது மட்டும் இன்றி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. அதேபோல நாளையும் நாளை மறுநாளும் முகூர்த்த நாள் என்பதால், மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

இதனால் நேற்று பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திரும்பும் திசையெல்லாம் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரயில்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் வேறு வழியின்றி பேருந்தை நாடி சென்றனர். அரசு பேருந்துகளும் நிரம்பி வழிந்ததால், ஆம்னி பஸ்களிலும் செல்லலாம் என்று நினைத்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சென்னையில் இருந்து நாகர்வோவிலுக்கு சர்வ சாதாரணமாக 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலித்தனர். இதனால் அரசு பஸ்களில் முண்டியடித்துக் கொண்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். நேற்று தான் இந்த நிலை என்றால் இரண்டாவது நாளாக இன்றும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. விழுப்புரம் திருச்சி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
வரும் பேருந்துகள் எல்லாம் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் கடைசி நேரத்தில் வரும் பயணிகள், போதிய இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் முன்வைத்துள்ளனர். சென்னையில் இருந்து அதிக அளவில் வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி செல்வதால் பேருந்து நிலையம் மட்டுமின்றி அடுத்தடுத்து வரும் சுங்கச்சாவடிகளில் இதனால் கடுமையான டிராபிக் நெரிசல் காணப்படுகிறது.
திருச்சி, மதுரை, நெல்லை போன்ற ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்திலும் டிக்கெட்டுகள் காலியாகியுள்ளது. அதேபோல ஆம்னி பஸ்களிலும் மதுரைக்கு ரூ.2000 ஆயிரம் வரை டிக்கெட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட்டுள்ளது. இதனால் பயணிகள் பலரும் நொந்து போய் உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications