பட்டா மாறுதல், சிட்டா.. பதிவு செய்த நாளிலேயே பத்திரப்பதிவு.. 8 சார் பதிவாளர்களின் 100% டார்கெட்! செம
சென்னை : பத்திரங்களை பதிவு செய்த நாளிலேயே திருப்பிக் கொடுப்பதில், 100 சதவீதம் என்ற இலக்கை எட்டிய எட்டு சார் - பதிவாளர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவுக்கான, ஸ்டார் 2.0 என்ற சாப்ட்வேருடன், "தமிழ்நிலம்" தகவல் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது நில அளவை தொடர்பான விபரங்களை அறிய முடியும்..

அதேபோல, ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப்பட்டியல்கள் விபரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்யவும் இந்த செயலியில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. பட்டா, சிட்டா, பார்வையிட வேண்டுமானாலும், சரிபார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும், பட்டா மாறுதல் விண்ணப்பிக்கவும், நிலை விவரங்களை அறியவும், "எங்கிருந்தும், எந்த நேரத்திலும்" இணைய வழி சேவை இணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அரசாணைகள்: அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள், முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பதால், பொதுமக்களுக்கு தமிழ் நிலம் செயலி மிகுந்த உதவியாக இருந்து வருகிறது. அந்தவகையில், ஸ்டார் 2.0 வாயிலாகவே, பத்திரப்பதிவு பணிகள் துரிதமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், கள ஆய்வு போன்ற தேவைகள் இல்லாத இனங்களில், பத்திரங்களை பதிவு செய்த நாளிலேயே திருப்பித் தர வேண்டும்... ஆனால், பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் பத்திரங்களை நிலுவையில் வைப்பதாக புகார்கள் கிளம்பியிருந்தன.. அதனால்தான், பதிவு செய்த நாளிலேயே பத்திரங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சார் - பதிவாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ் நிலம் 2.0 வெப்சைட்டில், ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப்பட்டியல்கள் விபரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்யவும் இந்த செயலியில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. பட்டா, சிட்டா, பார்வையிட வேண்டுமானாலும், சரிபார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும், பட்டா மாறுதல் விண்ணப்பிக்கவும், நிலை விவரங்களை அறியவும், "எங்கிருந்தும், எந்த நேரத்திலும்" இணைய வழி சேவை இணைக்கப்பட்டுள்ளது.
100 சதவீதம்: அதுமட்டுமல்ல, பத்திரங்களை பதிவு செய்த நாளிலேயே திருப்பிக் கொடுப்பதில், 100 சதவீத இலக்கை எட்ட வேண்டும் என்றும் அப்படி 100 சதவீத இலக்கை எட்டும் சார் பதிவாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்படும் என்றும் கடந்த 2022 - 23ல் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. இதையடுத்து, 100 சதவீத இலக்கை எட்டும் நோக்கில் சார் பதிவாளர்களும், துரிதமாக பணியாற்றினர்.
இந்நிலையில், பத்திரங்களை பதிவு செய்த நாளிலேயே திருப்பிக் கொடுப்பதில், 100 சதவீத இலக்கை எட்டிய எட்டு சார் - பதிவாளர்களுக்கு, பதக்கமும், பாராட்டும் தற்போது வழங்கி, கவுரவிக்கப்பட்டுள்ளனர்.. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, இலக்கை எட்டிய 8 பேருக்கு வெள்ளி பதக்கம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பட்டா மாறுதல்: இந்த நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி பேசும்போது, "பத்திரங்களை பதிவு செய்தவுடன் திருப்பிக் கொடுப்பது இயல்பான பழக்கமாக மாற வேண்டும்.. அத்துடன் பதிவு முடிந்த நிலையில், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளையும் சார் - பதிவாளர்கள் உடனுக்குடன் முடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications