பட்டா மாறுதல்.. விரட்டி வரும் போலி பத்திரம்.. காஞ்சிபுரம் நில பத்திரத்தில் சிக்கிய குன்றத்தூர் விஏஓ
சென்னை: வீடு, மனை வாங்க போறீங்களா? பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்வது எப்படி தெரியுமா? பத்திரத்தில் பிழை இருந்தால், அதை திருத்த முடியுமா?
நிலம், வீடுகள் என எந்தவிதமான சொத்துக்களை வாங்கினாலும் அதற்கு பட்டாக்கள் மிகவும் அவசியம்.. எப்போதுமே உரிமையாளர்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கக்கூடிய ஆவணம் இதுவாகும்.

பட்டாக்கள்: இந்த பட்டா இருந்தால்தான், ஒருவரின் சொத்துக்கள் உரிமையானது என்பதற்கு அத்தாட்சியாகும்.. இந்த பட்டாவில், நிலம், வீடுகளின் உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற விவரங்கள் அனைத்துமே இடம்பெற்றிருக்கும்.
இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவில், மோசடிகள் நடப்பது அதிகரித்துவிட்டது.. போலி பத்திரங்களை பயன்படுத்தி, இந்த மோசடிகள் நடந்து வருகின்றன.. இதனை களைவதற்கான முயற்சியில் பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன், பல்வேறு முக்கிய அதிரடிகளையும் செய்து வருகிறது..
காலி மனை பத்திரம்: சமீபத்தில்கூட, காலி மனை பத்திரங்கள் பதிய நில புகைப்படம் கட்டாயம் என்று உத்தரவிட்டிருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளால் போலி பட்டாக்களின் நடமாட்டங்கள் ஓரளவு குறைந்து வருகின்றன.
அதேசமயம், போலி பட்டாக்களில் ஈடுபடுபவர்கள், பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாசில்தார், விஏஓ, என யார் மோசடியில் ஈடுபட்டாலும், அவர்களின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனடியாக கைது நடவடிக்கையும் பாய்ந்து வருகிறது.
கடந்த வாரம்கூட, ராமநாதபுரத்தில் சர்வேயர் ஒருவர் கைதானார்.. ஓம்சக்தி நகரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், பூர்வீக சொத்தை பாகப்பிரிவினை செய்து பட்டா மாறுதல் வழங்க, ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தார்.
லஞ்சம்: ராமநாதபுரம் தாலுகா சர்வேயராக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சிவா, என்பவரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க, திருநாவுக்கரசு கேட்டுக் கொண்டிருந்தார். இந்த ஆவணங்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டுமானால், 3,500 ரூபாய் லஞ்சம் வேண்டும் சிவா கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத திருநாவுக்கரசு, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் தரவும், போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை திருநாவுக்கரசிடம் தந்தனர்.
திருநாவுக்கரசு, சர்வேயர் சிவாவை தொடர்பு கொண்டு, பணத்தை தருவதாக சொன்னார். அதற்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, இ - சேவை மையத்திற்கு வருமாறு சிவா கூறினார். அங்கு, சிவாவிடம் ரசாயனம் தடவிய பணத்தை வழங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வீடியோ: இதோ இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்பதற்காக செல்வகாந்தன் என்பவரிடம் பரணிப்புத்தூர் VAO கிரண்ராஜ் ரூ.5,000 லஞ்சம் கேட்டாராம்.. உடனே செல்வகாந்தன், விஏஓ லஞ்சம் கேட்பதை, அவருக்கே தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்துவிட்டார்.. இந்த வீடியோவை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார் செல்வகாந்தன்.
இந்த வீடியோ மேலதிகாரிகன் பார்வைக்கு சென்றதையடுத்து, விஏஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. குன்றத்தூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது, காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
