கணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்
சென்னை: ஓய்வு பெற்ற தலைமை காவலரின் மனைவி ஒருவர் தனது வீட்டில் 21 அடி ஆழத்தில் குழி தோண்டியதால் பரபரப்பு எழுந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் ஓய்வு பெற்ற தலைமை காவலர். இவரது மனைவி மைதிலி (43). இவரது வீட்டு வாசலில் இருந்து மூட்டை மூட்டையாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது வீட்டில் இரவு நேரத்தில் குழிதோண்டு சப்தம் கேட்பதாகவும் அக்கம்பக்கத்தினர் டிபி சத்திரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் 21 அடி ஆழத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணை
அந்த பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மணல் மூட்டை கட்டி வெளியே வைத்திருந்ததும் தெரியவந்தது. இந்த மணல் ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து டிபி சத்திரம் போலீஸார் மைதிலியிடம் விசாரணை நடத்தினர்.

மந்திரவாதி
தன்னுடைய குடும்பத்தில் பல இழப்புகளை சந்தித்து வருகிறேன். கணவர் ராஜாவும் பக்கவாதத்தில் அவதிப்பட்டு வருகிறார். இதனால் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மந்திரவாதி சுரேஷை சந்தித்ததாக மைதிலி கூறியுள்ளார்.

மூடும் பணி
அந்த பள்ளத்தில் மாந்த்ரீக கயிறுகள், பொம்மை இருந்தது. அதை எடுத்து அழித்து விட்டனர். பின்னர் அந்த பள்ளத்தை மூடும் பணி நடைபெற்று வருவதாகவும் மைதிலி கூறியுள்ளார்.

வழக்கு இல்லை
இதையடுத்து அமைந்தகரை தாசில்தாருக்கு போலீஸார் புகார் கொடுத்தனர். பின்னர் மைதிலியிடம் கைப்பட எழுதி வாங்கிக் கொண்டு போலீஸார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications