நல்லா பண்றீங்க ஆபிசர்ஸ்.. பைக்கில் சென்றவருக்கு இப்படி ஒரு அபராதமா.. நாதக நிர்வாகி புகார்
சென்னை: இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பவனம் கார்த்திக் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக பைன் தொடர்பான புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தற்போது வாகனங்களில் செல்வோர் விதிமீறலில் ஈடுபட்டால் வாகன சோதனையில் மட்டுமல்ல, கேமரா அடிப்படையிலும், ஆன்லைன் முறையிலும் அபராதம் விதிக்கப்படுகிறது. கண் முன்னே அநியாயமாக போகிறார்களா.. போக்குவரத்து விதிமீறல் என்று தெரிகிறது. உடனே உங்கள் போனை எடுங்கள்.

போட்டோ எடுங்கள் அல்லது வீடியோ எடுங்கள்.. அதனை எந்த இடம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, சென்னையாக இருந்தால் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடலாம். அதன்பிறகு ஓரிரு நாளில் கேமராக்களை ஆய்வு செய்து சென்னை போலீசார் அபராதம் விதிப்பார்கள். இந்த நடைமுறை பல மாதங்களாக நடைமுறையில் இருக்கிறது.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் அபராதம் விதிக்கிறார்கள்.. வாகன சோதனையின் போது போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பி செல்வோரின் நம்பரை நோட் செய்து அபராதம் விதிப்பார்கள்..
ஆனால் அதேநேரம் வாகன சோதனையில் தப்பிச்சென்ற வாகனத்திற்கு பதில், வேறு வாகனத்திற்கு அபராதம் தவறுதலாக அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் அடிக்கடி நடப்பது உண்டு.. வேறுவாகனத்தின் எண்ணை குறிப்பிடும் போது, கடைசி எண் அல்லது வேறு ஏதாவது எண் மாறும் போது அபராதம் வேறு வாகனங்களுக்கு விதிக்கப்படும்.
இப்படி கேமராவை பார்த்து அல்லது வாகன சோதனையில் தப்பியவர்களுக்கு அபராதம் விதிக்கும் போது, ஹீரோஹோண்டா வாகனத்தை பஜாஜ் என்றும், பஜாஜ் வாகனத்தை சுசூக்கி என்றும் மாறிவிடும். ஏன் சில சமயங்களில் காருக்கு பதில் பைக் நம்பரும், பைக்கிற்கு பதில் கார் நம்பராகவும் மாறும் வாய்ப்பு உள்ளது.
அதுபோன்ற சூழல்களில், காரில் போனவர்களுக்கு ஹெல்மெட் போடவில்லை என்று அபராதம் வரும். பைக்கில் போனவர்களுக்கு சீட் பெல்ட் போடவில்லை என்று அபராதம் வரும். அதேநேரம் இதுபற்றி சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை அழைத்து தவறு பற்றி முறையிட்டால் உடனே தீர்வும் கிடைக்கும்.

இதனிடையே இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பவனம் கார்த்திக் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக பைன் தொடர்பான புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பவனம் கார்த்திக் வெளியிட்ட பதிவில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையச்செயலாளர் செந்தில்குமார் அவர்கள் மீது போக்குவரத்துக் காவல்துறை விதி மீறியதாக வழக்குப் பதிவுசெய்த குறுஞ்செய்தி வந்திருக்கிறது. வழக்கு என்னன்னா, சீட் பெல்ட் போடவில்லை என்பது! ஆனால், ட்விஸ்ட் என்னன்னா அவர் வைத்திருப்பது பைக்! இதில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் எண்ணும் இரு சக்கர வாகனத்தின் எண்தான். நல்லா பண்றீங்க ஆபிசர்ஸ்..! " என்று கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications