கோடையில் வருண பகவான் கருணை..மார்ச் மாதத்தில் பூமி குளிர கொட்டிய மழையால் மனம் குளிர்ந்த மக்கள்
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. பூமி குளிர கொட்டிய மழையால் இதமான சூழ்நிலை நிலவுகிறது.
சென்னை: வெயில் சுட்டெரிக்கும்..வெப்ப அலை வீசும் என்ற அச்சம் எழுந்த நிலையில் வருண பகவானின் கருணையால் மார்ச் மாதத்தில் மக்களின் மனம் குளிர கோடை மழை கொட்டித்தீர்த்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மதுரை,விருதுநகர்,திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச் மாத துவக்கத்தில் வெயில் சுட்டெரித்த நிலையில் சில வாரங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என மத்திய அரசு எச்சரித்தது. இதனையடுத்து மாநில அரசுகளும் மக்களுக்கு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவித்தனர்.
இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் விதமாக கடந்த சில நாட்களாக பல ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இடியும் மின்னலுமாக சென்னையிலும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வால், தமிழ்நாட்டில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.

ஆலங்கட்டி மழை
திருச்சியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. அரியலூர் நகர் பகுதியில் இரவு நேரத்தில், மிகுந்த சத்தத்துடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனர். அரியலூரில் 11 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டில், அரியலூரில் ஆலங்கட்டி மழை பெய்திருந்தது. நேற்றைய தினம் பெய்த ஆலங்கட்டி மழை மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. விழுப்புரத்தைச் சுற்றியுள்ள கானை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது. இதையடுத்து, ஐஸ் கட்டிகளை சேகரித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் மழை
சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர், வியாசர்பாடி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணிநேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், சாலையில் நீர் வெள்ளம் பெருக்கெடுத்தது.

கடலூரில் கனமழை
கடலூர் மாவட்டம், நெய்வேலி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதேபோல, விழுப்புரத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

விருதுநகரில் சூறைக்காற்று
விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் அரை மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. கழிவுநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், நகர்ப்பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

3 நாட்களுக்கு மழை நீடிக்கும்
கோடை கால மழையானது மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசைகாற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக 21, 24 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் மழை
22, 23 தேதிகளில் கடலோர மாவட்டங்கள்மற்றும் அவற்றை ஒட்டிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மனம் குளிர வைத்த மழை
தமிழ்நாட்டில் வெப்பத்தை தணிக்கும் வகையில் மார்ச் மாதத்தில் மழை பெய்து மக்களின் மனம் குளிர வைத்துள்ளது. அதே நேரத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications