கருணாநிதி நினைவிட அருங்காட்சியகத்தை நாளை முதல் மக்கள் சுற்றிப்பார்க்கலாம்! அனுமதிச் சீட்டு அவசியம்!
சென்னை: சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் மற்றும் அங்குள்ள அருங்காட்சியகத்தை நாளை முதல் பொதுமக்கள் சுற்றிப்பார்க்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருங்காட்சியகத்தை பார்வையிட அரசின் இணைய முகவரியில் முன்கூட்டியே அனுமதிச் சீட்டு பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னைக் கடற்கரையில் அண்ணா, கலைஞர் ஆகிய இருவரது நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் எதிரில் அமர்ந்து படிப்பது போன்ற தோற்றத்தில் அண்ணா அவர்களின் சிலையும்,வலபுறம் இளங்கோவடிகள், இடப்புறம் கம்பர் சிலைகள் அமைந்துள்ளன. நினைவிடங்களின் முன்பகுதி இருபுறங்களிலும் பழமையான புல் வெளிகள் அமைந்துள்ளன. இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியம் அமைந்துள்ளது.
அதேபோல் கலைஞர் சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் அருமையான அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் உள்ள கருணாநிதியின் எழிலோவியங்கள் எனும் அறையில், கருணாநிதியின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், படைப்புகள் அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் அமைந்துள்ளன.
அடுத்ததாக அதே அருங்காட்சியகத்தில் “உரிமைப் போராளி கலைஞர்” என்ற அறையில், மாநில உரிமைகளுக்காக கருணாநிதி முன்னெடுத்த முயற்சிகள் குறித்த தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. கருணாநிதியின் படைப்புகளான நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் தென்பாண்டிச் சிங்கம் முதலான 8 நூல்களின் பெயர்களில் ஒவ்வொன்றின் மீதும் கை வைத்தால் அந்த நூல் பற்றிய விளக்கம் வீடியோவாகத் தோன்றி எடுத்து உரைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருணாநிதி அருங்காட்சியகத்தில் ரயிலில் பயணித்த அனுபவத்தோடு பார்க்கு வகையில் “சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்” தலைப்பில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில் நுழைந்தால் திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். நாம் அமர்ந்த நிலையில், தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ரயில் நிலையங்களைக் கடந்து சென்னையை அடையலாம். அந்தந்த ஊர்களில் கருணாநிதி வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றும்.
கருணாநிதி நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்துக்கு செல்பவர்களுக்கு நினைவிலிருந்து நீங்காத வகையில் புதிய அனுபவத்தை தரும் வகையில் கட்டிட வேலைபாடுகள் கலை நுணுக்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications