களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்.. உலா வரும் குழந்தை கிருஷ்ணர்கள்! பூஜைக்கு உகந்த நேரம் எது?
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி என்கிற கோகுலாஷ்டமி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருஷ்ணர் சிலைகள், பூஜை பொருட்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. மக்கள் இன்று வீடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு மகிழ்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி என்பது இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இன்றைய நாள் கிருஷ்ணரின் பிறந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். இந்த நாளில் பக்தர்கள் விரதம் அனுசரித்து, கிருஷ்ண ஜெயந்தி விழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.

ஆவணி மாதம் அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணரின் அவதாரம் நிகழ்ந்தது. அஷ்டமியில் எட்டாவது குழந்தையாகப் பகவான் கிருஷ்ணர் அவதாரம் எடுத்ததன் காரணமாக ஆவணி மாதம் அஷ்டமி நாளான இன்று ஜென்மாஷ்டமியாகக் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணரின் பிறந்தநாளான இன்று, மதுரா பிருந்தாவனத்தில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து வழிபட்டு கிருஷ்ணரின் அருளைப் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை குழந்தை இல்லாதவர்கள் அல்லது திட்டமிடுபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற கிருஷ்ணரை வழிபடுவார்கள்.
தமிழ்நாட்டில் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டைச் சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலம் இடுகின்றனர். மாவிலை தோரணங்களால் வீட்டை அலங்கரிக்கின்றனர். கிருஷ்ணர் சிலை அல்லது படங்களை அலங்கரித்து, அவருக்கு சந்தனம், குங்குமம் பூசி, பட்டு ஆடை அணிவித்து, அவர் கையில் புல்லாங்குழலுடன் காட்சி இருக்கும்படி அழகாக அலங்கரிப்பார்கள். அதன்பிறகு, பால், நெய், வெண்ணெய் மற்றும் பிற பொருட்களை படைப்பார்கள். பூக்கள் தூவி மனதார வணங்குவார்கள். கிருஷ்ணருக்கு அப்பம், முறுக்கு, நாவல் பழம் ஆகியவற்றைப் படைத்து வணங்குகின்றனர்.
கிருஷ்ணரை தங்கள் வீட்டுக் குழந்தையாக பாவித்து மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, பாதங்களில் மாவிட்டு, நடக்க வைத்து பாதங்களை பதிவு செய்து கிருஷ்ணர் வருகையை கொண்டாடுவது வழக்கம். பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் மகிழ்கின்றனர். மேலும், கோவில்களில் உறியடி திருவிழாக்களும் இன்று நடத்தப்படுகின்றன.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை உட்பட பல ஊர்களிலும் கடைகளில் பூக்கள், பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்றுள்ளது. மேலும், பலரும் கிருஷ்ணர் சிலைகளை ஆர்வத்துடன் வழிபடுவதற்காக வாங்கிச் சென்றுள்ளனர்.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இன்று காலை 9.15 மணி முதல் நாளை காலை 7.30 வரை அஷ்டமி திதி இருக்கிறது. எனவே கோகுலாஷ்டமி வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications