குடும்ப அட்டை.. தபால் நிலையங்களில் ஆதார் அட்டை, பயோமெட்ரிக் கைரேகைக்காக குவியும் பொதுமக்கள்.. ஏன்?
சென்னை: குடும்ப அட்டைதாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாது என்றும் பரவிய வதந்தி காரணமாக தபால் நிலையங்களில் ஆதார் அட்டை கேட்டும், பயோமெட்ரிக் கைரேகைக்காகவும் மக்கள் குவிந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைதாரர்களுக்கு நியாய நிலையில் உணவு பொருட்கள் வழங்க 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2.23 கோடி குடும்ப அட்டையில் 7 கோடியே 52 ஆயிரத்து 847 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 49 ஆயிரத்து 842 பேர் தங்களது ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்துள்ளனர்.

இந்நிலையில் 'ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உணவு பொருட்களை மாநிலத்தின் எந்த ஊரில் உள்ளவர்களும் எந்த ஊரிலும் போய் வாங்கி கொள்ளலாம். உணவுப்பொருள் வழங்கும் திட்டம் முற்றிலும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளதுடன், ரேஷன் பொருட்களும் கைரேகை பதிவு மூலம் வழங்கப்படுவதால், குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடைகளிலும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை கைரேகை வைத்து வாங்க சென்று வருகிறார்கள்.
வங்கிகளில் எப்படி கே.ஒய்.சி. என்ற ஒன்று அரசின் மானியம் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படுகிறதோ, அதுபோல் நியாய விலை கடைகளில் பயனாளிகளின் விவரங்களை முழுமையாக பதிவு செய்து அவர்களுக்கு அரசின் மானிய விலை உணவுகள் போய் சேருகிறதா என்பதை அறிந்து கொள்ள ரேஷன் அட்டையில் உள்ள அனைவருமே (குறிப்பாக அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள்) கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு தற்போது தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சுய விவரங்களை வெள்ளைத்தாளில் அளிப்பதுடன் விரல் ரேகை சரிபார்ப்பை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை அறிவுறத்தி இருந்தது. இதனிடையே குடும்ப அட்டையில் கைரேகை இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும், குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கப்படும் என்றும் சமூக ஊடங்களில் வதந்தி பரவியது. இதை திட்டவட்டமாக தமிழக அரசு மறுத்தது.
இந்தநிலையில், ரேஷன் அட்டைதாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல்களை ரேஷன் ஊழியர்கள் சொல்லக்கூடாது தமிழக அரசு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிரடியாக உத்தரவிட்டது. ஆனால் இந்த கைரேகை பதிவு செய்வதில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் எனில் கைரேகை பதிய வேண்டும் ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதால், பலர் குழந்தைகளின் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க தபால் அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகிறார்கள். இதேபோல் கைரேகை பிரச்சனை உள்ளவர்கள் கைரேகைக்காக தபால் நிலையங்களில் குவிந்து வருகிறார்கள். இதன் காரணமாக வழக்கத்தைவிட தபால் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications