நீச்சல் குளம், ஏரிகளில் இவ்வளவு ஆபத்தா! வெயிலுக்கு பயந்து வைரஸ்களிடம் சிக்கிடாதீங்க.. கவனம் ப்ளீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் மக்கள் நீச்சல் குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ஆனால் நீர் நிலைகளிலிருந்துதான் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்கிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. இது குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இன்று அக்னி வெயில் தொடங்கிவிட்டது. அக்னி தொடங்காததற்கு முன்னரே வெயில் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியிருந்தது. இந்நிலையில் அக்னி தொடங்கியுள்ளதால் வெயிலுடன் சேர்த்து அனல் காற்றும் மக்களை வாட்டி எடுத்துவிடும். எனவே மக்கள் கோடை வசஸ்தலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. அதே நேரம் உள்ளூரில் நீச்சல் குளங்கள் மற்றும் ஏரி, அணைக்கட்டு என பல்வேறு நீர் நிலைகளை நோக்கியும் மக்கள் அணிவகுக்க தொடங்கியுள்ளனர்.

People flock to the swimming pool as summer begins; But dont just forget this

ஆனால் இந்த நீர் நிலைகளிலிருந்து சில வகை நோய்கள் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே இதுபோன்ற நீர் நிலைகளில் குளிக்கும் முன்னர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது நாம் குளிக்கும் நீர் அசுத்தமாக இருப்பின் கண் வலி, காது வலி, வயிற்றுப்போக்கு, தோல் வெடிப்பு, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் எனவே இதை தவிர்க்க வேண்டுமெனில் அசுத்தமான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

பொதுவாக அசுத்தமான நீரில் குளிக்கும்போது அந்நீரை விழுங்கிவிட்டால் வைரஸ் நம் உடலில் பரவிவிடும். இதை தவிர்த்து வேறு சில வழிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ்கள் பரவும் அபாயம் இருக்கிறது. அதாவது சிலருக்கு அசுத்தமான நீர் தோலில் பட்டவுடன் அரிப்பு ஏற்படலாம். அதேபோல அசுத்தமான நீர் ஆவியாகும்போது அந்த நீராவியை நாம் சுவாசித்தால் அதன் மூலமாக கூட வைரஸ் பரவும். சரி இதெல்லாம் இயற்கையாக வைரஸ் பரவும் முறையாகும். ஆனால் செயற்கையாக மனிதர்களாலும் வைரஸ், பாக்டீரியாக்கள் பரவும்.

ஆய்வாளர்களின் கூற்றின்படி ஒவ்வொருவரின் உடலின் வெளிப்பகுதியிலும் சுமார் 0.14 சதவிகிதம் அளவுக்கு மனித மலம் இருக்கும். ஏற்கனவே ஒருவர் தீராத வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருக்கிறார் எனில் அவர் நீர் நிலைகளில் குளிக்கும்போது அவரது உடலில் உள்ள 0.14 சதவிகித மலம் நீரில் கலந்துவிடும். இதே நீர் நிலையில் வேறு யாராவது குளிக்க நேரும்போது அந்த நீரை தெரியாமல் விழுங்கிவிட்டால் அவருக்கும் தீராத வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிடும்.

வயிற்றுப்போக்கு தவிர தோல், காது, சுவாசம், கண் மற்றும் பிற நோய்த்தொற்றுகள் அனைத்தும் இயற்கையில் ஏற்படும் பாதிப்புகளும். நீர் நிலைகளில் சுற்றியிருக்கும் மண், அதில் உள்ள தாதுகள், நீர் நிலையில் வசிக்கும் உயிரினங்கள், பூச்சிகள், வைரஸ்கள் ஆகியவற்றால் மேற்குறிப்பிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். செயற்கை நீச்சல் குளங்களில் குளிப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட காரணம் நீரில் கலக்கப்பட்டுள்ள கெமிக்கல்தான். சரியான விகிதத்தில் அல்லாமல் சற்று கூடுதலாக கலக்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் காரணமாக இது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

சரி இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிப்பது எப்படி? அதற்கும் ஆய்வாளர்கள் சில அறிவுறைகளை கூறியுள்ளனர். அதாவது குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது வைரஸ் பாதிப்பால் சிகிச்சைபெற்று வருபவர்கள், புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மற்றும் எச்.ஐ.வி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதுபோன்ற நீர் நிலைகளில் இறங்கி குளிப்பது மிகவும் ஆபத்தானதாகும்.

ஏனெனில் இவர்கள் கிரிப்டோஸ்போரிடியம் எனும் ஒட்டுண்ணியால் பாதிக்கப்படலாம். இந்த கிரிப்டோஸ்போரிடியம் பல்வேறு விலங்குகளை பாதிப்புக்கும். அதேபோல இதில் சில வகை கிரிப்டோஸ்போரிடியம் மனிதர்களையும் பாதிக்கும். இதிலிருந்து தப்பிக்க நீச்சல் வீரர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள சில வழிகளை பின்பற்றுகின்றனர். அதை பின்பற்றினாலே நாமும் இதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

அதாவது, நமக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருந்தால் இரண்டு வாரங்களுக்கு பின்னர்தான் தண்ணீரில் இறங்க வேண்டும். நீச்சல் அடிக்கும்போது வாயில் தண்ணீர் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீச்சல் முடிந்த பின்னர் காதுகளை நன்கு உலர வைக்க வேண்டும். நீச்சல் குளத்தில் குளிக்கிறீர்கள் எனில் அந்த குளம் குளோரின் அல்லது புரோமின் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் நீரின் ph அளவை பரிசோதிப்பதும் நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+