ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே கூடாது.. போராட்டத்தில் குதித்தது மக்கள் அதிகாரம்!
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சென்னையில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சென்னையில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது.
சென்னை பாரிமுனையில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் ஸ்டெர்லைட்க்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மேலும், இன்று நடக்கும் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனையடுத்து, அனைவரையும் போலீசார் கைது செய்தனர். முன்னதாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் திசை திருப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என பண்டாரம்பட்டி கிராமத்தில் 300 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் இன்று கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உச்சநீதிமன்றம் சென்றுள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆலையை மீண்டும் திறக்க சாதகமான நிலை உள்ளதாக கூறப்படும் நிலையில், போராட்டம் மீண்டும் தொடங்கி உள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தருண் அகர்வாலா குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழகஅரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்டெர்லைட்டை மூடியது தவறு என அகர்வாலா குழு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications