சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்று காலையே கூட்டமோ கூட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: நாளை ஞாயிற்றுக்கிழமை, தமிழகம் முழுக்க முழு ஊரடங்கு என்பதால், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்று கூட்டம் அலைமோதியது.

நாளை உணவுக்கு தேவையான மீன்களை வாங்குவதற்கு, பொதுமக்கள் அதிக அளவுக்கு காசிமேடு சந்தைக்கு வருகை தந்தனர்.

People throng Kasimedu fish market in Chennai as Sunday will be full lockdown

"மீன் வாங்கிவிட்டு உடனே திரும்பி செல்ல வேண்டும், வியாபாரிகளுக்கு மட்டுமே இங்கு அனுமதி. பொதுமக்களுக்கு அனுமதியில்லை" என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் மீன் விற்பனை செய்ய குறிப்பிட்ட கடைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. ஆயினும் சுற்றுவட்டார மக்களும் மீன் வாங்க வந்துவிட்டனர்.

காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்ட்டு கூட்டம் சேராமல் தடுக்க முற்பட்டனர். பொதுமக்கள் பெரும்பாலும் முகக் கவசம் அணிந்திருந்தாலும், அவற்றை வாயை மற்றும் மூக்கை முழுமையாக மூடும் அளவுக்கு பயன்படுத்தவில்லை என்பதையும் பார்க்க முடிந்தது.

Recommended Video

    தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை lockdown நீட்டிப்பு

    இன்று முதல் அமலுக்கு வந்தது அன்லாக் 3.0.. இரவு ஊரடங்கு ரத்து.. கடை திறப்பு நேரம் அதிகரிப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது அன்லாக் 3.0.. இரவு ஊரடங்கு ரத்து.. கடை திறப்பு நேரம் அதிகரிப்பு

    சமூக இடைவெளி பெருமளவுக்கு பேணப்படவில்லை. மற்றொரு கோயம்பேடு போல காசிமேடு மாறிவிடக் கூடாதே என்பதால், காவல்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை வாசகங்களை பிறப்பித்தபடி இருந்தனர்.

    English summary
    Tomorrow is Sunday, Tamil Nadu will be under a complete curfew, so today the crowd waved at the Kasimedu fish market in Chennai. The public flocked to the Kasimeddu market in large numbers to buy the fish they needed for food tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X