ஸ்டெர்லைட் ஆலை.. மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் - ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதை மூடி இருப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக நிதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்வாறு பேசி உள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று 'எண்ணித் துணிக' என்ற பெயரில் இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

ஸ்டெர்லைட் மூடல்: அப்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆளுநர் ரவி பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர் எழுந்து நின்று, வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் நிதியை முறைப்படுத்துவதற்கு என்ன தேவை உள்ளது? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஆளுநர் ரவி, "தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடிக்கணக்கில் நிதி வருகிறது.
அந்த நிதி தொண்டு செய்வதற்காக பயன்படுத்தப்படாமல் வேறு நோக்கங்களுக்காக பயன்படுப்படுகிறது. நாட்டின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்க வெளிநாட்டு நிதி உதவிகள் பயன்படுத்தப்படுகின்றன. கூடங்குளத்தின் அணு உலை அமைக்கப்படும்போது போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டன.

பாப்புலர் பிரண்ட் தடை: கேரள மாநிலம் விளிஞ்சத்தில் அதானியின் துறைமுகம் அமைக்கப்படும்போதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கெல்லாம் வெளிநாட்டு நிதிதான் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைதான். வெளிநாட்டு நிதி உதவி மூலமாக மக்களை தூண்டிவிட்டு அதை மூடிவிட்டார்கள். மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு வெளிநாடுகளில் இருந்தே பெரும்பாலான நிதி கிடைத்து வந்தது.
இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு பணம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு சென்ற 90 பேரை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பே அனுப்பி உள்ளது. இத்தகைய வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்துவதற்காகவே மத்திய அரசு எப்சிஐ நிதியை முறைப்படுத்தி இருக்கிறது." என்றார்.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications