Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.. இன்று கலெக்டர் ஆபிஸ் போங்க.. 85 நாட்களுக்கு பிறகு வந்த நல்ல செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதால் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகங்களில் இன்று முதல் மக்கள் குறைதீர் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் பொதுவாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாதம் தோறும் நடைபெறுவது வழக்கம்.. மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுக்களாக வழங்கலாம்.

Tamil Nadu collector

இதேபோல தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் நடைபெறும். இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை, தொடர்பான மனுக்களை குறைதீர் கூட்டத்தில் அளித்து பயன்பெறுவார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவரிடம், அனைத்து துறைகள் தொடர்பாகவும் புகார் அளிக்கலாம். குறைகளை தெரிவிக்கலாம். மாவட்ட ஆட்சி தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்..

இந்நிலையில் கடந்த மார்ச் 16ம் தேதி லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்று தொடங்கி கடந்த வாரம் இறுதி வரை அமலில் இருந்தது. இதன் காரணமாக மக்கள் குறைதீர் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகங்களில் இன்று முதல் மக்கள் குறைதீர் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட அறிவிப்பில் "லோக்சபா தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், லோக்சபா தோ்தல் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் விலக்கிக்கொண்டது. எனவே, இன்று (ஜூன் 10) முதல் வழக்கம்போல திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும். இதேபோல, மனுநீதி நாள் முகாம்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்களும் வழக்கம்போல நடைபெறும்.
இந்தக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+