செருப்பு, துடைப்பத்தால் சீமான் படத்தை ஆவேசமாக அடித்த பெண்கள்.. ஒப்பாரி வைத்த பெரியார் ஆதரவாளர்கள்!
சென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ளனர் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆவேசமாக சீமானின் உருவப் படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து கொந்தளித்துள்ளனர்.
தந்தை பெரியாரை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை இன்று பெரியாரிய ஆதரவு அமைப்புகள் முற்றுகையிடுவதாக அறிவித்தன. சென்னை நீலாங்கரையில் முற்றுகையிடும் போராட்டக்காரர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீமான் வீடு முன்பாக ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் இரவு முதலே குவிந்தனர். மேலும் அப்பகுதியில் 200-க்கும் அதிகமான போலீசாரும் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தந்தை பெரியார் குறித்து அண்மைக்காலமாக சீமான் தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார். அவர் பேசுவதற்கு ஆதாரம் கேட்டால், பெரியார் புத்தகங்களை நாட்டுடையாக்கிமானால், தான் ஆதாரத்தைக் காட்டுவதாக கூறினார். தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தந்தை பெரியாரை இழிவுபடுத்துகிற சீமான் வீடு இன்று முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்து, இன்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு அருகே திரண்டனர்.
இந்நிலையில், சீமான் வீட்டு முன்பாக நாம் தமிழர் கட்சியினர் மகளிர் அணியினர் கையில் உருட்டு கட்டைகளுடன் திரண்டனர். சீமானின் வீட்டை முற்றுகையிட வந்தால் வெட்டுவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சீமான் வீடு முன்பாக சீமான் கார்ட்டூன் பதாகைகளுடன் திரண்ட பெரியார் ஆதரவு கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள், சீமான் படத்தை துடைப்பம், செருப்புகளால் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் ஒருவர் சீமான் படத்தை துடைப்பத்தால் ஆவேசமாக அடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், சாலையில் அமர்ந்து, சீமான் படத்தை கீழே வைத்து செருப்பால் அடித்ததோடு, ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது, பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக சீமானை கண்டித்து முழக்கமிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications