புலிகளுக்காக சீமான் செய்தது என்ன? இந்திய உளவுத்துறையின் கையாள்தான் சீமான்- 'அதர்மம்' மனோஜ்
சென்னை: 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்த பிறகு தாமே விடுதலைப் புலிகள் முகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்படக் காரணமே இந்திய உளவுத்துறைதான் என்று பெரியாரியவாதியான 'அதர்மம்' யூடியூபர் மனோஜ்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
ஒன் இந்தியா தமிழுக்கு 'அதர்மம்' யூடியூபர் மனோஜ்குமார் அளித்த நேர்காணல்:
ஒன் இந்தியா தமிழ் கேள்வி: விடுதலைப் புலிகளின் இறுதிக்காலத்தில் கூட புலிகளின் கடற்படை தளபதி சூசை கூட சீமான் பெயரைத்தானே சொல்கிறார் என்கிறார்களே நாம் தமிழர் கட்சியினர்..

'அதர்மம்' மனோஜ்: சீமானுடன் விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி சூசை பேசியதாக சொல்லப்படும் ஆடியோவும் எடிட் செய்யப்பட்டதுதான். சூசை மரணிக்கும் முன்னர் பேசியதாக சொல்லப்படும் ஆடியோவை உடனேயே ஏன் சீமான் தரப்பு வெளியிடவில்லை? ஒரு ஆண்டு கழித்துதானே சூசை பேசியதாக சொல்லப்படும் ஆடியோவை வெளியிட்டார் சீமான்? சூசை பேசியதாக சொல்லப்படும் ஆடியோவை உடனே வெளியிட்டிருந்தால் தமிழ்நாட்டில் பெரிய கொந்தளிப்பு வந்திருக்கும்தானே.. விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பேசுவதாக சொல்கிற ஆடியோ பதிவு அன்று வெளியாகி இருந்தால் தமிழ்ச் சமூகத்தில் எவ்வளவு பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கும்? அது ஒருபுறம் இருக்க.. அது எடிட் செய்யப்பட்ட குரல் பதிவு மட்டும்தான். அப்படியே சீமானிடம் விடுதலையை நாங்கள் கொடுத்துவிட்டுச் செல்கிறோம் என சூசை சொன்னதாக வைத்துக் கொண்டாலும் கூட, சீமானின் முந்தைய வரலாறுதான் என்ன? சீமான் என்ன புலிகளுக்கு ஆயுதம் தயாரித்து சிறைக்குப் போனாரா? ரத்த பாக்கெட்டுகளை அனுப்பி சிறைக்குப் போனாரா? மருந்து உதவிகள் செய்து சிறைக்குப் போனாரா? பெட்ரோல் கடத்திவிட்டு சிறைக்குப் போனாரா? அப்படி எதுவும் இருக்கிறதா?
அதனைக் கூட விட்டுவிடுங்க.. 2008-க்கு முன்னர் புலிகளை ஆதரித்து சீமான் சிறைக்குப் போயிருக்கிறாரா? சீமான் சிறைக்குப் போனது என்பது 2009-ம் ஆண்டு இறுதிக் கட்டத்தில்தான்.. அதற்கு முன்னர் சீமான் என்பவர் யாரென்றே தெரியாது. விடுதலைப் புலிகள் தங்களுக்காக உழைத்த கொளத்தூர் மணி அனுப்பி வைத்த ஒரு நபர் வருகிறார் என்பதாக மட்டுமே ஈழத்திலும் புலிகளுக்கும் சீமான் அறிமுகம் என்பதுதான் திட்டவட்டமான உண்மை. இதைத்தாண்டி எந்த ஒரு தொடர்புமே சீமானுக்கும் விடுதலைப் புலிகளுக்குமே கிடையாது. அப்படியான ஒரு தொடர்பு இருந்தால்- சீமானுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருந்தால் ஒரே ஒரு ஆதாரத்தைக் கொடுங்கள்?
ஒன் இந்தியா தமிழ் கேள்வி: பெரியாரை விமர்சித்ததால்தான் பிரபாகரனுடனான படம் போலி என்கிறார்கள் என சீமான் குற்றம்சாட்டுகிறாரே?
அதர்மம் மனோஜ்: நாங்கள் பெரியாரையும் பிரபாகரனையும் பிரித்துப் பார்க்கவில்லை. பிரபாகரன் எங்களுக்கான தலைவர்தான். 2009-ம் ஆண்டுக்கு முன்னர் வரை சீமான் எங்கே இருந்தார் என்ற கேள்விக்கு பதில் இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கமே அழிந்த பின்னர்தான், நாங்கள்தான் புலிகள் முகம், பிரபாகரன் முகம் என சொல்வதே ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் வியூகம். 2009-ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை ஆதரித்தாலோ, பிரபாகரனை ஆதரித்தாலோ அவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். 2009-ம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதையும் பிரபாகரனை ஆதரிப்பதையும் சீமானால் எளிதாக செய்ய முடிகிறது எனில் 'இந்திய' உளவுத்துறை அவர்களை அனுமதிக்கிறது என்பதாகத்தான் பார்க்க முடியும். இதனைத் தவிர, பெரியாரை விமர்சித்ததால் பிரபாகரனுடனான படம் போலி என சொல்கிறோம் என சீமான் பேசுவது எல்லாம் கோமாளித்தனமானது. பெரியாரை சீமான் மட்டுமே இன்று விமர்சிக்கிறார் என்பது அல்ல.. பெரியாரை 100 ஆண்டுகளாக விமர்சித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நாங்கள் சொல்லி எல்லாம் சங்ககிரி ராஜ்குமார், பிரபாகரனுடனான போட்டோவை எடிட் செய்தேன் என்றெல்லாம் சொல்லவில்லை.
ஒன் இந்தியா தமிழ் கேள்வி: பெரியார் எதிர்ப்பில் சீமான் இப்போதும் உறுதியாக இருக்கிறாரே
அதர்மம் மனோஜ்: பெரியார் எதிர்ப்பில் சீமான் உறுதியாக இருக்கட்டும்.. இப்போது வீடு வரை வந்துவிட்டோம்.. அடுத்து என்ன என்பதை அவர் பார்ப்பார்.. பெரியார் எதிர்ப்பில் சீமான் மாற வேண்டியது இல்லை என வலியுறுத்துகிறேன். தாராளமாக பெரியார் எதிர்ப்பில் சீமான் உறுதியாகவே நிற்கட்டும்.
"சீமான் எங்க கால் மயி*க்கு கூட ஈடாகமாட்டார்" - கொந்தளித்த மனோஜ்#Seeman #Periyar #மனோஜ் #சீமான் pic.twitter.com/BcGq2hcqg1
— Oneindia Tamil (@thatsTamil) January 23, 2025
ஒன் இந்தியா தமிழ் கேள்வி: பெரியார் குறித்து நான் விவாதிக்க தகுதியான நபர்கள் இல்லை என்கிறாரே சீமான்?
'அதர்மம்' மனோஜ்: சீமான், விவாதிக்க வாங்க என சொல்லும் போது என்ன என்ன தகுதி வேண்டும் என்றெல்லாமா கூறினார்? விவாதிக்க தயார் என நாங்கள் அறிவித்த உடனேயே தகுதியான நபர் வேண்டும் என்கிறார் சீமான். இப்படித்தான் போன ஆண்டு தமிழர் முன்னேற்றப்பட்டையின் தலைவர் வீரலட்சுமியின் கணவரிடம் குத்துச்சண்டைக்கு தயார் என்றார்; அவரும் வருகிறேன் என்றார்; ஆனால் அப்போதும் தகுதியான நபர் இல்லை என்றார்; அதற்காக சீமானுடன் குத்துச்சண்டை போடுவதற்கு மைக்டைசனையா கூட்டிக் கொண்டு வர முடியும்? சீமானுக்கு வாதம் செய்வதற்கு திறமை இல்லை. எந்த ஆதாரமும் கைகளில் இல்லை. அதில் இருந்து தப்பிக்கவே இப்படியான மொக்கையான வாதங்களை சீமான் வைத்துக் கொண்டிருக்கிறார். பெரியார் இயக்கத்தில் நேற்று சேர்ந்த தோழரின் கால் முடிக்கு கூட சீமான் தகுதியே இல்லாதவர். தகுதி எல்லாம் பார்த்தால் நாங்கள் சீமானுடன் பேசவே வேண்டியது கிடையாது. 50 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருந்த கோவை ராமகிருட்டிணன் இங்கே வந்துள்ளார். அவருடன் சீமானை ஒப்பிடத்தான் முடியுமா? வாதம் என்று வந்துவிட்டால் வாதத்துக்கு வந்துதான் ஆக வேண்டும்.. சரி ஆதாரத்தை கையில் வைத்திருக்கும் சீமான் அதனை ஊடகங்களில் வெளியிட்டுவிட வேண்டியதுதானே... தினமும் 15 இட்லி சாப்பிட்டுவிட்டு ஊடகங்களிடம் பேசுகிற சீமான் அதை ஊடகங்களிடமே தரலாமே..
ஒன் இந்தியா தமிழ் கேள்வி: இந்த போராட்டம் சீமானுக்கு சாதகமாகிவிடாதா?
அதர்மம் மனோஜ்: பிராமண ஊடகங்கள் 10 ஆண்டுகளாக சீமானை வளர்த்து வருகின்றன; ஊடகங்களின் செல்லக் குழந்தையாகவே சீமான் இருந்து வருகிறார். விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியை ஊடகங்கள் லைவ் செய்யாது; ஆனால் சீமான் பேட்டியை நிச்சயம் லைவ் செய்யும். பாஜகவின் உத்தரவு அப்படி. அதனால் இது சீமானுக்கு சாதகமாகிவிடக் கூடிய போராட்டம் அல்ல.












Click it and Unblock the Notifications