Exclusive: நாம் தமிழர் கோமாளிகளே..நாங்க ரெடி.. அடுத்தது சீமான் அலுவலகம் முற்றுகை- 'அதர்மம்' மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு முற்றுகையிடப்பட்டதைப் போல அடுத்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகமும் பெரியாரிய உணர்வாளர்களால் முற்றுகையிடப்படும் என பெரியாரியவாதியான 'அதர்மம்' யூடியூபர் மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.

நமது ஒன் இந்தியா தமிழுக்கு 'அதர்மம்' யூடியூபர் மனோஜ்குமார் அளித்த நேர்காணல்:

ஒன் இந்தியா தமிழ் கேள்வி: நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடலாம்.. ஏன் சீமான் வீட்டை முற்றுகையிட வேண்டும் என்பது அக்கட்சி நிர்வாகிகளின் கேள்வி.

seeman periyar naan tamilar katchi

'அதர்மம்' மனோஜ்: கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் தம்பிகள் அடிவாங்கிக் கொள்ளட்டும்.. வீட்டுக்கு வந்தால் தமக்கு சேதாரம் ஆகும் என்பதால் நாம் தமிழர் தம்பிகளை சீமான் கோர்த்துவிடுகிறார். வீட்டை முற்றுகையிடுவோம் என அறிவித்து ஒருவாரம் ஆகிவிட்டதுதானே.. அப்பவே அலுவலகத்துக்கு வாருங்கள் என சவால்விடலாமே சீமான்? அப்படி சீமான் கூறியிருந்தால் நாங்கள் அலுவலகத்துக்குள் நுழைந்திருப்போமே.. சீமான் வீடு முன்பாக நின்று ஒன்று கூடிய வீட்டை முற்றுகையிட்ட பிறகு அலுவலகத்துக்கு வாங்க என்கிறாரே சீமான்.. நிச்சயம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கும் வருவோம்.. பெரியார் குறித்த அவதூறை சீமான் நிறுத்தாதவரை எப்போது வேண்டுமானாலும் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிப்போம்.

ஒன் இந்தியா தமிழ் கேள்வி: சீமான் வீட்டுக்கு வந்துள்ள தம்பிகளுக்கு காலையில் சாப்பாடு, பகலில் பிரியாணி, உருட்டுக்கட்டைகளுடன் கட்சியினர் நிற்கின்றனரே..

'அதர்மம்' மனோஜ்: உருட்டுக்கட்டைகளுடன் சீமான் வீட்டில் 500 பேர் இருப்பார்களே.. இங்கே நாங்கள் 2,700 பேர் இருக்கிறோம்.. அவங்க 500 பேர் உருட்டுக்கட்டைகளுடன் இருக்கட்டும்.. நாங்கள் கொண்டு வந்திருப்பதும் பிளாஸ்டிக் பைப் என நினைத்தீர்களா? பாதி உருளைக் கட்டைகள்தான்.. நீங்க கோமாளி பசங்கள் உங்களுக்கே இவ்வளவு இருந்தா.. விடுதலைப் புலிகளுக்காக 30 ஆண்டுகளாக உழைத்த பின்னணியைக் கொண்டவர்கள் நாங்கள். சீமானின் ரசிகர்களுக்கே இவ்வளவு இருந்தால்.. சித்தாந்தவாதியாக, கொள்கைவாதியாக இருக்கக் கூடிய எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? அவர்களை விட பெரிய ஏற்பாட்டுடன்தான் நாங்களும் வந்திருக்கிறோம்.

ஒன் இந்தியா தமிழ் கேள்வி: பிரபாகரனுடன் சீமான் இருக்கும் போட்டோ சர்ச்சை வந்துள்ளது; சீமான் - பிரபாகரன் போட்டோவை எடிட் செய்தது நான் தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருக்கிறார்..

'அதர்மம்' மனோஜ்: சீமான் ஈழத்துக்குப் போனது உண்மை. அங்கே திரைப்படங்களுக்காக சில வேலைகள் செய்ததும் உண்மை. அதே நேரத்தில் கொளத்தூர் மணி (திவிக தலைவர்), வன்னி அரசு (விசிக துணை பொதுச்செயலாளர்) கால்களில் விழுந்து பிரபாகரனுடன் ஒரு போட்டோ மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.. என கேட்டுக் கொண்டு போய் பிரபாகரனுடன் 2 நிமிடம் நின்றதும் உண்மை. பிரபாகரனுடன் சீமான் போட்டோ எடுத்ததும் உண்மைதான். ஆனால் அந்த போட்டோ சீமானின் கைகளுக்கு வந்து சேரவே இல்லை. ஈழத்தில் இருந்து சீமான் திரும்பி வந்த பிறகு, கொளத்தூர் மணி, வன்னி அரசு ஆகியோரிடம் பிரபாகரனுடன் எடுத்த போட்டோவின் நகலை வாங்கித் தருமாறு கெஞ்சியவர்தான் சீமான். 2009-ம் ஆண்டு இறுதிவரை கெஞ்சியவர்தான் சீமான்.. அங்கே மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது சீமான் கேட்டுக் கொண்ட போட்டோவை பெற்றுத்தர யாரும் முயற்சிக்கவும் இல்லை. 2010-ம் ஆண்டுதான் முதன் முதலில் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் தற்போதைய படம் வெளியானது. விகடனில் வெளிவந்த படம், எடிட் செய்து கொடுக்கப்பட்ட படம். இந்த படத்தின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை தள்ளி வைத்துவிடுவோம். ஈழத்துக்கு செல்வதற்கு முன்னர் 2008-ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் நன்மதிப்பைப் பெறுமளவுக்கு, பிரபாகரனின் அன்புக்கு பாத்திரமாகும் அளவுக்கு சீமான் செய்தது என்ன? சீமானின் முந்தைய வரலாறுதான் என்ன? என்னைப் பற்றிய அறிமுகம் இருந்ததால் ஒன் இந்தியா தமிழ் என்னைப் பேட்டி எடுக்கிறது. அப்படி 2008-ம் ஆண்டுக்கு முன்னர் புலிகளுக்கும் சீமானுக்குமான அறிமுகம்தான் என்ன?

நாங்கள் சொல்கிறோமே.. கோவை ராமகிருட்டிணன் (தபெதிக பொதுச்செயலாளர்) விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் தயாரித்துக் கொடுத்து 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார்; கோவை ஆறுச்சாமி சிறையில் இருந்தார்; கொளத்தூர் மணி, விடுதலைப் புலிகள் பயிற்சி எடுக்க தளம் அமைத்துக் கொடுத்து 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார்; வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்), புலிகளின் முகமாகவே இருந்து பல வேலைகள் செய்து பல ஆண்டுகள் சிறையில் கழித்தார் என ஆதாரங்களைத் தருகிறோமே.. இவை பதிவு செய்யப்பட்ட உண்மைகள்.,. போட்டோ பதிவுகள் அல்ல. பிரபாகரனுடன் வைகோ இருக்கும் படம் போலியானது என யாருமே சொல்ல முடியாது; ஏனெனில் இருவரும் 30 ஆண்டுகள் நட்பு பாராட்டியது எல்லோருக்குமே தெரிந்த உண்மை. ஏன் சீமான் மீது மட்டும் கேள்வி வருகிறது எனில் சீமானுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி அனைவரது ஆழ்மனதில் இருப்பதால்தான் எளிமையாக இந்த கோபம் பற்றிக் கொள்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+