பெரியாரின் 145-வது பிறந்த தினம்.. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
சென்னை: தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் அண்ணா சாலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் வெளியே அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியார் படத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் பிறந்த நாளை ஒட்டி சமூக நீதி நாள் உறுதி மொழியை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழியை முதல்வர் மு.க ஸ்டாலின் வாசித்தார். " யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத்திறனும் பகுத்தறிவு பார்வையும் கொண்டவனாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம் சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.
சமுக நீதியை அடித்தளமக கொண்ட சமுதாயம் அமைந்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்" எனக் கூறி முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக தனது "எக்ஸ்' சமூக வலைத்தள பதிவில், எடப்பாடி பழனிசாமி பதிவிட்டு இருந்ததாவது:- சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கவும், சாதிய பாகுபாடுகளை அழிக்கவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் கல்வியை முன்னெடுத்தும் போராடிய புரட்சியாளர், சமூக நீதிக் காவலர், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். கார்கே கூறுகையில், " மூட நம்பிக்கை மற்றும் அறியாமை என்னும் சங்கிலிகளை உடைப்பதற்கான சாவி கல்வி எனக்கூறியவர் பெரியார். சமூக நீதி, சமுத்துவத்துக்காக பாடுபட்ட மாபெரும் சமூக சீர்திருத்தவாதி பெரியாருக்கு வீரவணக்கம்" என்று கூறியுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications