துக்ளக் விழாவுக்கே அனுமதி ரத்து.. மியூசிக் அகாதெமி அதிரடி.. குருமூர்த்தி போட்ட பதிவு!
சென்னை: டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கும் முடிவை விமர்சித்து குருமூர்த்தி எழுதிய காரணத்திற்காக துக்ளக் விழாவுக்கு அளித்த அனுமதியை மியூசிக் அகாதெமி ரத்து செய்துள்ளது.
சென்னை மியூசிக் அகாதெமி வரும் மார்ச் மாதம் டிஎம் கிருஷ்ணாவுக்கு 'சங்கீத கலாநிதி' விருதை அளிக்க இருக்கிறது என்ற அறிவிப்பு வெளிவந்தது முதல் கர்நாடக சங்கீத உலகம் சர்ச்சையில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த 'சங்கீத கலாநிதி' விருதுடன் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பெயரில் வழங்கப்படும் விருது தொகையான ஒரு லட்சம் ரூபாய் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட இருக்கிறது. எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை தரம் தாழ்ந்து விமர்சித்த ஒருவருக்கு எப்படி அவரது பெயரிலேயே விருதைக் கொடுக்கலாம் எனக் கேட்டு எம்.எஸ். பேர் வி.சீனிவாசன் கோர்ட் படிக்கட்டு வரை ஏறி இருக்கிறார். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு மனு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார்.

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி கடைசியாக எழுதி வைத்துள்ள உயிலில், தனது பெயரில் யாருக்கும் விருது அளிக்கக்கூடாது என அவர் எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சங்கீத உலகில் கிருஷ்ணாவுக்கு இந்த விருதை அளிக்கக்கூடாது என்று பலரும் கருத்து கூறிவரும் நிலையில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ஆங்கில பத்திரிகை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் மிகக் காட்டமாகச் சங்கீத சபா நிர்வாகத்தை விமர்சித்துக் கடந்த 10 ஆம் தேதி ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இதனால் குருமூர்த்தி துக்ளக் ஆண்டு விழாவை நடத்த இந்த சபாவை முன்பதிவு செய்திருந்த நிலையில் மியூசிக் அகாடமி அவர் நிகழ்ச்சிக்கு அளித்த அனுமதியை ரத்து செய்துள்ளது.
குருமூர்த்தி முன்வைத்துள்ள தனது விமர்சனத்தில் டி.எம்.கிருஷ்ணா கடந்த காலங்களில் தெரிவித்த பல கருத்துகளைக் கவனப்படுத்திச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார். சுப்புலக்ஷ்சுமியை 'கவர்ச்சியானவர்' என்று அவர் ஒரு 'அழகு பொம்மை' என்று 'கவர்ச்சியானவர்' என்றும் கிருஷ்ணா முன்வைத்த தரக்குறைவான சொற்களை நினைவுபடுத்தி இருந்தார். ஆகவே, எம்.எஸ். இசை பாரம்பரியத்திற்கு எதிரான கருத்துகளைக் கொண்ட இவருக்கு அந்த விருதை அளிக்கக்கூடாது என்றும் வாதிட்டிருந்தார்.
ஏற்கெனவே டி.எம். கிருஷ்ணா, மியூசிக் அகாதெமியை மைலாப்பூர் பிராமணர்கள் ஆதிகம் நிறைந்த சபை என்றும் பேசி இருந்தார். அதனால் கடந்த 10 ஆண்டுகளாக அவர் இங்கே கச்சேரி நடத்தாமல் புறக்கணித்து வந்தார். கர்நாடக இசைக் கலைஞர்கள் மத்தியில் ஒரு தெய்வீக தோற்றம் கொண்டவர் எம்.எஸ். அவர் இசை வழியே ஆன்மிகத்தையும் சமூக சேவையையும் செய்து வந்தவர். அவரை விமர்சிப்பது, ஒட்டு மொத்த இசைக்கலைஞர்களை விமர்சிப்பதாகும் என்று கூறி தனது தாத்தாவுக்கு அளிக்கப்பட்ட இதே விருதை பாலகாட் ராம்பிரசாத் கூறியிருந்தார்.

பலரையும் போலவே குருமூர்த்தியும் தனது விமர்சனத்தை முன்வைத்து எழுதி இருந்தார். மியூசிக் அகாதெமி பாரம்பரிய இசைப் பாரம்பரியத்திலிருந்து விலகிப் போவதையே இந்தத் தேர்வு காட்டுகிறது என்று சாடி இருந்தார். ஆகவே, நிர்வாகத்தினர் இவரது கருத்தைக் கண்டு ஆவேசமடைந்துள்ளனர். கட்டுரை வெளியான அன்றே மியூசிக் அகாதெமி நிர்வாகம் குருமூர்த்திக்கு தொலைப் பேசி செய்து வரும் 2025 ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி துக்ளக் ஆண்டு விழாவுக்காக அரங்கம் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
விருதுத் தேர்வை குறிப்பாக சர்ச்சைக்குரியதாக ஆக்கினார். மேலும், ஒருமுறை விருது பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் இருந்தபோதும், குருமூர்த்தியின் கூற்றுப்படி, கர்நாடக இசையின் ஆழமான தத்துவ அம்சங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாத இசையமைப்பாளர்கள் அல்லாதவர்களுக்கு இந்த செயல்முறை மாறிவிட்டது என்று விமர்சனம் குறிப்பிட்டது.
இந்த விழா அகாதெமியின் மண்டபத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால், முதன்முறையாக அரசியல் செல்வாக்கு மிக்க குருமூர்த்தியின் துக்ளக் விழாவை நடத்துவதற்கே சங்கீத சபா அனுமதி மறுத்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து குருமூர்த்தி அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேற்படியான விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
சங்கீத சபா இந்த விவகாரம் தொடர்பாக அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுவதற்குப் பதிலாக மாற்றுக் கருத்து அடக்குவதைப் போல் நடந்துகொள்கிறது என்று சிலர் கருத்து கூறுகின்றனர். மேலும் சபா கர்நாடக இசை உலகில் மிகவும் மதிக்கப்படும் ஆளுமைகளின் பாரம்பரியத்திற்குக் கௌரவம் வேண்டும். அதைவிட்டு நிர்வாகம் இதைச் சொந்த பிரச்சினையாக எடுத்துக் கொள்வது வேதனையானது என்றும் சமூக வலைத்தளத்தில் சிலர் எழுதி வருகின்றனர்.
குருமூர்த்தியின் விமர்சனம் கர்நாடக இசை சமூகம் அதன் மதிப்புகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தது. இவரது பார்வையில் ஆழமான பக்தியில் வேரூன்றிய ஒரு கலை வடிவத்தை மதச்சார்பின்மை என்ற பெயரில் அச்சுறுத்தும் போக்கை எதிர்க்க வேண்டும். கர்நாடக இசையானது அதன் ஆன்மீக சாரத்தை இழந்தால், அது பிரபலமான இசைக்கு நிகரான ஒரு பொழுதுபோக்கு வடிவமாக மாறிவிடும் என்று எச்சரித்தார்.
டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை விமர்சிக்கும் உரிமை உள்ளது என்பதை ஏற்றுக் கொண்ட மியூசிக் அகாதெமி, அதே உரிமையை குருமூர்த்தியின் கருத்திற்கும் அளித்திருக்க வேண்டாமா என்று கேட்கிறார் கர்நாடக இசை பற்றிய விமர்சனங்களை எழுதிவரும் நபர் ஒருவர். துக்ளக் விழாவுக்கான அனுமதியைச் சங்கீத சபா ரத்து செய்திருப்பதன் மூலம் மிகப்பெரிய எதிர்வினைகளை அந்நிர்வாகம் சந்திக்கலாம் என்கிறார் மற்றொரு இசைப் பிரியர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications