பணம் இருந்தால்தான் மரியாதையா? கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யகோரி ஐகோர்ட்டில் மனு
சென்னை: தமிழக கோயில்களில் பின்பற்றப்படும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், "தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு என்ற பெயரில் 500 ரூபாய் வரை பணம் வசூலித்து, சிறப்பு கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது முக்கியமான கோயில்களில் நடைமுறையில் உள்ளது.

கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் பணம் வசூலித்து, சிறப்பு தரிசனம் செய்ய அவர்களுக்கு அனுமதி வழங்க எந்த சட்டப் பிரிவும் அனுமதி வழங்கவில்லை. தமிழ்நாட்டில் கடந்த 1967 ஆம் ஆண்டுக்கு பின் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின் தான் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இந்த கட்டண தரிசன முறை காரணமாக, சாதாரண மக்கள் சாமி தரிசனத்துக்காக கோயில்களில் கூட்ட நெரிசலில் பல மணி நேரம் பொது தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், புதுமண தம்பதிகள், வேண்டுதலுக்காக பால் குடம் எடுப்பவர்கள், காவடி எடுப்பவர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், உபயதாரர்கள் உள்ளிட்டோருக்கு இலவச சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்.
கோயில்களில் சாமி தரிசனம் செய்ய பணத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் இந்த திராவிட தர்மம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications