Phethai Storm: உருவானது பேய்ட்டி புயல்.. சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை
வங்க கடலில் உருவாகி உள்ள பேய்ட்டி புயல் காரணமாக வடதமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: வங்க கடலில் உருவாகி உள்ள பேய்ட்டி புயல் காரணமாக வடதமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. கடந்த வாரம் உருவான இந்த தாழ்வு நிலை கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்தது.
இந்த நிலையில் இது புயலாக மாறியுள்ளது.

புயலாக வலுவடைந்தது
கொஞ்சம் கொஞ்சமாக இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது.புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி பின் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் வலுவான புயலாக மாறியுள்ளது. இதற்கு பேய்ட்டி புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பேய்ட்டி புயலுக்கான பெயரை தாய்லாந்து வைத்தது.

தீவிரம் அடையும்
இந்த புயல் இன்று மாலைக்குள் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திற்கும் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். ஆனால் கஜா புயல் அளவிற்கு இந்த புயலால் பாதிப்பு ஏற்படாது. அந்த அளவிற்கும் காற்றும் வீசாது.

எங்கு கடக்கும்
ஆந்திராவில் இந்த புயல் கரையை கடக்க உள்ளது. நாளை பிற்பகல் கரையை கடக்கும். ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டனம் - காக்கிநாடா இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திராவில் குண்டூர், கோதாவரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னைக்கு மழை
சென்னைக்கு எவ்வளவு அருகில் புயல் கரையை கடக்கிறதோ அந்த அளவிற்கு புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயலால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் கண்டிப்பாக இன்றும் நாளையும் மழை பெய்யும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications