1 மணி சம்பவம்! ரிதன்யா கணவர் மட்டுமல்ல.. மாமியார், மாமனாருக்கும் ஆப்பு.. போனில் இருக்கும் ஆதாரங்கள்
சென்னை: ரிதன்யாவின் கணவர் கவின் மற்றும் ரிதன்யாவின் மாமனார், மாமியாருக்கும் இந்த வழக்கில் பெரிய சிக்கல் ஏற்படும் என்று தகவல்கள் வருகின்றன. முக்கியமாக இந்த வழக்கில் சில முக்கியமான ஆதாரங்கள் போனில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதன்படி ரிதன்யா முதல்முறை வீட்டிற்கு வந்தது இரவோடு இரவாக என்று கூறப்படுகிறது. அதாவது இரவு 1 மணிக்கு ரிதன்யா வீட்டிற்கு வந்துள்ளார். அன்று இரவு ரிதன்யாவின் மாமனார் வீட்டில் இருந்து ரிதன்யா அப்பாவிற்கு ஒரு போன் வந்துள்ளது. 1 மணிக்கு இந்த போன் வந்துள்ளது. அதன்பின்தான் ரிதன்யா வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் ரிதன்யா மாமனார், மாமியாருக்கு சிக்கலாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரிதன்யா கணவர் கவின் போனில் ஆபாச படங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் பாலியல் வறட்சியில் இருந்ததாக கூறப்படுகின்றன. இந்த ஆதாரங்கள்.. போன் கால் ரெக்கார்டுகள் எல்லாம் அந்த குடும்பத்திற்கே எதிராக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ரிதன்யா வழக்கு
ரிதன்யாவுக்கும், கவினுக்கும் 2025 ஏப்ரல் 11-ம் தேதி திருமணம் நடந்தது. ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் நகை மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வோல்வோ கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணமாகி முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்ததாகவும், மூன்றாவது வாரத்தில் இருந்து வாக்குவாதங்கள் தொடங்கியதாகவும் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அண்ணாதுரையும், ரிதன்யாவின் தாயாரும் தலையிட்டு ரிதன்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
ரிதன்யாவிற்கு நேர்ந்த கொடுமை
கவின் அவ்வப்போது ரிதன்யாவைப் பார்க்க வந்துள்ளார். 20 நாட்களுக்குப் பிறகு, கவின் அவளை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜூன் 22-ம் தேதி கவின், ரிதன்யாவை அவரது பெற்றோரின் வீட்டிற்கு மீண்டும் அழைத்து வந்தபோது, ரிதன்யா சோகமாகவும், மன அமைதி இழந்தும் காணப்பட்டார். அப்போது ரிதன்யா, "எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்றும், நான் எனது பெற்றோர் வீட்டில் தங்க விரும்புவதாகவும்" கூறியுள்ளார். அடுத்த நாளே கோவிலுக்கு சென்றவர் அங்கேயே காரில் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கிறார்.
ஜாமீன் கிடைக்கவில்லை
இன்றுதான் திருப்பூர் நீதிமன்றம், ரிதன்யாவின் மாமியார் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ரிதன்யாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அவரது தந்தை தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்கனவே, ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் கவினின் தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலமாக இருப்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று ரிதன்யா தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், ரிதன்யாவை அவரது கணவர் கவின்குமார் உடல் ரீதியாகக் கடுமையான சித்ரவதைகளைச் செய்துள்ளார் என்றும், இது தெரிந்தும் கவினின் பெற்றோர் கண்டிக்கவில்லை என்றும் ரிதன்யா தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கவின்குமார் மற்றும் அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ரிதன்யாவின் மாமியார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று மேற்கொண்ட நிலையில் திருப்பூர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications