#pillowchallenge.. இந்தா புதுசா ஆரம்பிச்சுட்டாய்ங்கல்ல.. ஆனா எதுக்குன்னு தான் தெரியல!
சென்னை: பில்லோ சேலஞ் எனும் வித்தியாசமான சவால் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
கடந்த சில ஆண்டுகளாகவே வித்தியாசமான பல சவால்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐஸ்பக்கெட் சேலஞ், கிகி சேலஞ் தொடங்கி டிசர்ட் சேலஞ் வரை பல சேலஞ்சுகளை பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில் தற்போது டிரெண்டாகி இருக்கிறது பில்லோ சேலஞ். கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டைவிட்டு வெளியே போக முடியாதே பிறகு எப்படி இந்த சேலஞ்சை செய்வது என யோசிக்க வேண்டாம்.

தலையணை மட்டும்
இந்த சேலஞ் மிகவும் சிம்பிள். ஒரு தலையணையை எடுத்து, உடலோடு அணைத்து, ஓரு கயிறை அல்லது பெல்ட்டை வைத்து கட்டிக்கொள்ள வேண்டும். இதில் முக்கியமான விதி என்னவென்றால், தலையணையை தவிர வேறு எதையும் அணிந்திருக்கக் கூடாது.

பில்லோ சேலஞ்
இப்படி தலையணையை உடம்பில் கட்டிக்கொண்டு, அந்த கோலத்தை அப்படியே போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும். அவ்வளவு தான் விஷயம்.

இந்தியாவில் பில்லோ சேலஞ்
மேற்கத்திய நாடுகளில் ஆரம்பித்த இந்த சவால் இப்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி உள்பட பல லட்சம் பேர் இந்த பில்லோ சேலஞ்சை செய்து போட்டோ பதிவிட்டுள்ளனர். இந்தியாவில் பிரபல பாலிவுட் நடிகை ராஜ்புட் பாயல் இந்த சவாலை ஏற்று போட்டோ போட்டிருகிறார்.

மக்களின் ஆர்வம்
ஆரம்பத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த சவாலை ஆர்வமாக செய்து வந்தனர். தற்போது பொதுமக்களும் இதனை செய்ய தொடங்கியுள்ளனர். சிலர் விளையாட்டாக குழந்தைகளுக்கு,குறிப்பாக கைக்குழந்தைகளுக்கு கூட தலையணையை உடம்பில் கட்டி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

தேவையில்லாத ஆணிகள்
சரி இந்த சவாலால் என்ன பயன் என கேட்கிறீர்களா? ஒரு பயனும் கிடையாது. அவர்கள் புடுங்குவது பூராவுமே தேவையில்லாத ஆணிகள் தான்.

அறிவு ஜீவிகளின் கண்டுபிடிப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் சில அறிவு ஜீவிகளின் கண்டுபிடிப்பு தான் இது. வீட்டில் பொழுது போகாமல் வேலையற்ற வேலையாக இதனை செய்து வருகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பொழுது போகிறதோ இல்லையோ, சமூக வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடக்கும் நெட்டிசன்களுக்கு நன்றாகவே பொழுது போகிறது.












Click it and Unblock the Notifications