Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛ஸ்டாலினுக்கு சல்யூட்’’.. கேரளாவுக்கு ஆதரவாக களமிறங்கும் தமிழ்நாடு.. நன்றி கூறிய பினராயி விஜயன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநிலத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக கூறி, டெல்லியில் எம்பிக்களை கொண்டு போராட்டம் நடத்தப்போவதாக கேரள அரசு அறிவித்திருந்தது. இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இதற்கு பினராயி விஜயன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

தேசிய அளவில் வரி பகிர்வில் தென் மாநிலங்களுக்கு குறைவான தொகை மட்டுமே கொடுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக, கேரளா இந்த குறைவான வரி பகிர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இதற்கு எதிராக கேரள எம்பிக்கள் டெல்லியில் வரும் 8ம் தேதி மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு தமிழ்நாடும் ஆதரவு தெரிவித்திருந்தது.

Pinarayi Vijayan thanked Chief Minister Stalin for supporting the protest in Delhi

இது குறித்து பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையாகவும் பாரபட்சமாகவும் செயல்படும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகத் குறிப்பிட்டதோடு, இந்த விஷயத்தில் தமிழ்நாடு தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு சில காலங்களாகவே செயல்பட்டு வருவதாகவும், மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இதுபோன்ற மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான ஒருமித்த கருத்து உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதோடு, மாநிலங்களின் பொதுச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது , மாநில சட்டமன்றத்தில் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும்,.. இருப்பினும் மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கான வாய்ப்பினை கட்டுப்படுத்துவதற்காக ஒன்றிய அரசு அரசமைப்பு சட்டம் 293-ன் படி தனக்குள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு செய்வதன் மூலம் மாநில அரசுகளின் நிதி நிர்வாகம் தொடர்பான முனைப்புகளைத் தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும், இதனால் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கமான நிதிக்கூட்டாட்சியின் அடிப்படைக்கே அச்சுறுத்தலாக அமைவதாகவும் சாடினார்.

மாநில அரசின் நிகரக்கடன் உச்சவரம்பினை கணக்கிடுவதற்கான மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 விழுக்காடு என நிர்ணயித்ததனால் நடப்பாண்டில் 6000 கோடி மாநில அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அதோடு, ஒன்றிய அரசின் திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் காட்டியதால் இத்திட்டத்திற்கான மொத்த கடன் தொகையான 33,594 கோடி ரூபாயின் கடன் சுமை மாநில அரசின் மீதே விழுந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே ஜி.எஸ்.டி முறையை அமல்படுத்தியதன் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில், இத்தகைய பாரபட்சமான மற்றும் அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது எனக் குறிப்பிட்டவர், ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், நிதிக்கூட்டாட்சித் தத்துவத்தினை பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும் இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த ஆதரவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். “டெல்லியில் கேரளா நடத்த உள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதற்கு ஸ்டாலினுக்கு சல்யூட்! ஜனநாயகம், அரசியலமைப்பு விழுமியங்களை பாதுகாக்க ஒன்றாக பயணிப்போம்” என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+