எண்ணூர் டூ மாமல்லபுரம்.. சென்னை எல்லை சாலை பயன்பாட்டிற்கு வருவது எப்போது? வெளியான குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணூர்- மாமல்லபுரம் இடையே அமைக்கப்பட்டு வரும் ஆறு வழி விரைவுச்சாலையின் ஒரு பகுதியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். 8 சிறிய பாலங்கள் 11 சுரங்கப்பாதை, 11 ரயில்வே மேம்பாலங்கள், லாரிகள் நிறுத்துவதற்கான இடம் ஆகியவற்றுடன் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது உள்கட்டமைப்பு திட்டங்கள்.. குறிப்பாக போக்குவரத்து வசதி எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைப் பொறுத்தே நாட்டின் வளர்ச்சி இருக்கும். முதலீடுகளை பெறுவது.. புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது என நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் போதுமான போக்குவரத்து வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை பொறுத்தே அமைகின்றன.

chennai ennore mamallapuram

போக்குவரத்து நெரிசல்: இதனால், சாலை திட்டங்களில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், சென்னையில் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியின் போது மாமல்லபுரம் - மீஞ்சூர் இடையே பெரிய வெளிவட்டச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சாலை திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்துதல், நிதி ஒதுக்கீடு போன்றவற்றில் ஏற்பட்ட தொய்வு காரணமாக திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

சென்னை எல்லைச்சாலை: தற்போது, சென்னை எல்லைச்சாலை என பெயர் மாற்றப்பட்டு எண்ணூர் - மாமல்லபுரம் வரை நீட்டிக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூர், சென்னை - கொல்கத்தா, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு இணைப்பாக, சுமார் 12 ஆயிரம் கோடி மதிப்பில் எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தையும்- மாமல்லபுரம் பூச்சேரியையும் இணைக்கும் வகையில் 132.87 கிலோ மீட்டர் நீளம், 196 அடி அகலத்தில் 6 வழி விரைவுச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

25.3-கிலோ மீட்டர் தூரம் கொண்ட எண்ணூர் துறைமுகம் - தச்சூர், 26.2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட தச்சூர் - திருவள்ளூர் புறவழிச்சாலை, 30.6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட திருவள்ளூர் புறவழிச்சாலை - ஸ்ரீபெரும்புதுார், 23.8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில், 27.4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சிங்கப்பெருமாள் கோவில்- மாமல்லபுரம் பூஞ்சேரி வரை என 5 கட்டங்களாக பிரித்து பணிகள் நடந்து வருகிறது.

4வது ரிங் ரோடு: இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "இந்த சாலைகள் அமைக்க ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, சர்வதேச வளர்ச்சிக்கான நிதி மூலம் அமைக்கப்படுகிறது. சிங்கப்பெருமாள்கோவில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவயல், காட்டுப்பள்ளி ஆகிய நகரங்களை இணைக்கும் இந்த புதிய பசுமை விரைவு சாலை சென்னையின் 4-வது 'ரிங் ரோடாக' இருக்கும். ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் வாகனங்கள் இந்த சாலையில் செல்ல முடியும்.

5 சுங்கச்சாவடிகள்: தற்போது இரண்டரை மணி நேரத்தில் செல்லும் தூரத்தை இந்த பணி முடிந்தவுடன் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு மணி நேரத்தில் செல்ல முடியும். பெங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் வே மற்றும் சித்தூர் - தச்சூர் விரைவுச்சாலை திட்டங்களுடன் இந்த சாலை இணைக்கப்பட உள்ளது. இந்த சாலையில் 40 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் ஐந்து சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. உள்ளூர் வாகனங்கள், சர்வீஸ் சாலை வழியாக இலவசமாக செல்லலாம். தற்போது இரவு, பகலாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

எப்போது பயன்பாட்டுக்கு வரும்: இந்தநிலையில் இச்சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் போக்குவரத்து நெருக்கடியும், காற்று மாசுபடுவதும் குறையும் என்பதால், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி மற்றும் எல் அண்டு டி தனியார் துறைமுகங்கள், இச்சாலை பணியை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளனர். எண்ணூர் முதல் தச்சூர் வரையிலான முதற்கட்ட பணிகள், தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரையிலான 2-ம் கட்ட பணிகளை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புத்தாண்டில் போக்குவரத்துக்கு திறக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

இந்த சாலை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் வட மற்றும் தென் மாவட்டங்களில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் துறைமுகத்திற்கு வந்து செல்லும் வாகனங்கள், தடையின்றி குறித்த நேரத்தில் பயணிக்க முடியும். இந்த சாலையில் 8 சிறிய பாலங்கள் 11 சுரங்கப்பாதை, 11 ரயில்வே மேம்பாலங்கள், லாரிகள் நிறுத்துவதற்கான இடம் ஆகியவற்றுடன் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+