தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்.. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
சென்னை: மத்திய அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என்றும் கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக நான்கு லட்சம் வரை சென்றது.
முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையின் பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக வழக்கமாக நடைபெறும் பல்வேறு பணிகளும், நடவடிக்கைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

கொரோனா 2ஆம் அலை
அதன்படி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெறவிருந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 10 வகுப்புத் தேர்வு பெரும்பாலான மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டன, +2 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதுதவிர நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது மாணவர்கள் ஏற்கனவே மன அழுத்தத்தில் உள்ளதால் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என ஒரு தரப்பினரும், தேர்வுகளை ரத்த செய்தால் மாணவர் சேர்க்கையில் சிக்கல் எழும் என மற்றொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

+2 தேர்வுகள்
இதனால் நாட்டில் +2 தேர்வுகளை நடத்துவது குறித்து முடிவெடுக்க இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம்
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, " இந்த கூட்டத்தில் சிபிஎஸ்சி மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வு எப்படி நடத்தலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கண்டிப்பாக +2 தேர்வுகள் நடைபெறும்
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் எப்போது கொரோனா பாதிப்பு குறைகிறதோ, அப்போது இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்கள் +2 தேர்வுகளை நடத்தவே விருப்பம் தெரிவித்துள்ளன. அதேபோல தமிழகத்திலும் +2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

இறுதி முடிவு
ஆனாலும், தற்போது கொரோனா உச்சத்தில் உள்ளது. எனவே குழந்தைகளின் நலனைக் பாதுகாப்பதும் எங்களின் கடமைதான். கொரோனா பாதிப்பு எப்போது குறைக்கிறதோ, அப்போது பொதுத்தேர்வை நடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். தமிழகத்தின் இறுதி நிலைப்பாடு குறித்து வரும் செவ்வாய்க்கிழமைக்குள் மின்னஞ்சல் மூலம் மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications