விவசாயிகளுக்கான உதவித்தொகை.. மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 தவணை பற்றின குட் நியூஸ்
சென்னை: மத்திய அரசின் மானியம் மற்றும் உதவி தொகை உள்ளிட்ட திட்டங்கள், குறு, சிறு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க, ஒவ்வொரு விவசாயியும் தனித்துவ அடையாள எண் பெற வேண்டும் என்று வேளாண் துறை அறிவுறுத்தியிருக்கிறது.. ஆனால், இன்னும் நிறைய பேர் தனித்துவ அடையாள எண் பெறவில்லை. இந்த சூழலில், விவசாயிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்குமா? என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.. இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் ஒன்றையும் தந்துள்ளார்.
விவசாயிகளின் விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்து, தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில், மத்திய, மாநில அரசின் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த அனைத்துவகை மானியங்களும், இந்த அடையாள எண் அடிப்படையிலேயே வழங்கப்படும்.

பிஎம் கிசான் திட்டம்
PM கிசான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள தகுதிஉள்ள விவசாயிகளுக்கு வருடந்தோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் இந்த நிதியில் இதுவரை 20 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
PM கிசான் திட்டத்தில், 21வது தவணை தொகை பெறுவதற்கும், இந்த அடையாள எண் பெறுவது அவசியமாகிறது. அனைத்து பொது சேவை மையங்களிலும், இலவசமாக விவசாயிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள், தங்கள் ஆதார், நில ஆவண நகல், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றுடன், பொது சேவை மையம் அல்லது வேளாண்மை உழவர் நலத்துறை வாயிலாக நடைபெறும் முகாம்களில் பங்கேற்று, நவம்பர் 15ம் தேதி அதாவது இன்றைக்குள் பதிவுக்கான கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
தவணைத் தொகை எப்போது
இந்நிலையில், 3-வது தவணை தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை.. இதற்கான காரணம் குறித்து வேளாண்மை அதிகாரிகள் சொன்னதாவது:
"தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள எண் பெற்றவர்களுக்கே அரசின் மானியத் திட்டங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இன்னும் பல விவசாயிகள் அடையாள எண் பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு 21-வது தவணை கிடைக்குமா? என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
டிசம்பரில் உதவித்தொகை
அதேநேரத்தில் போலி பயனாளிகள், இறந்தவர்கள் மற்றும் நிலங்களை விற்பனை செய்தவர்களை கணக்கெடுத்து நீக்கம் செய்யும் வகையிலான சரிபார்ப்பு பணி தீவிரமாக நடைபெற்றறு வருகிறது. இந்த பணி முடிந்த பிறகு, இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத (டிசம்பர்) தொடக்கத்தில் விவசாயிகளுக்கான 21-வது தவணைத் தொகை விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் என்பது இனிவரும் காலங்களில் முக்கிய அடையாளமாக மாறவுள்ளதால், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையத்தை அணுகி கட்டணமில்லாமல் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்" என்று தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications