விவசாயிகளுக்கு ஹேப்பி.. பி.எம். கிசான் யோஜனாவின் 16வது சரவெடி.. அதுக்கு முன்னாடி இதை முடிச்சிருங்க
சென்னை: 15 தவணைகளாக நிதியுதவி பெற்று, 16 வது தவணைக்கு விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.. இந்நிலையில், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) அதாவது பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நேரடி பலன்கள்: இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்பட்டு வருகிறது... அந்தவகையில், ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது.
அந்தவகையில், நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 3 கோடிக்கும் அதிகமான பெண் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்... அவர்கள் மட்டும் மொத்தம் ரூ. 53,600 கோடி நிதியை பெற்றுள்ளனர்.
விவசாயிகள்: இப்போது 2024 வருடம் துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணை மூன்றிலிருந்து 4ஆக உயர்த்தப்படலாம் என்றும், வருடத்திற்கு இனி 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாய் உயர்த்தப்படலாம் என்றும் சொல்கிறார்கள். இதை பற்றி உறுதியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. என்றாலும், வரப்போகும் இடைக்கால பட்ஜெட்டின்போது, விவசாயிகளுக்கான குட்நியூஸ் வெளியாகலாம் என்ற யூகமான தகவலும் வட்டமடிக்கிறது.
இதுவரை மொத்தம் 15 தவணைகளாக 2000 ரூபாய் பெற்றிருக்கிறார்கள்.. நடப்பாண்டில் 16-வது தவணையை பெற வேண்டுமானால், பி.எம்.கிசான் வெப்சைட்டில் தங்களது ஆதார் நம்பரை உறுதி செய்ய வேண்டும் ..
தவணைகள்: அப்படி உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே தவணை வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியாக அறிவித்திருக்கிறது. இதற்கான, கடைசி தேதி வருகிற 31.01.2024 ஆகும். அதனால், தகுதியுள்ள வேளாண் மக்கள் உடனடியாக ஆதாரை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
உங்களது ஆதார் எண்ணை எப்படி உறுதி செய்வது தெரியுமா? பிஎம் கிசான் திட்டத்தில் பலனடைவோர், பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது செல்போன் மூலமாகவோ, ஆதார் நம்பரை கீழ்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம்.
ஆதார் எண்: அருகிலுள்ள பொது சேவை யைத்திற்கு சென்று, தங்களுடைய பெயரை பி.எம்.கிசான் இணைய தளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு ஓடிபி வரும்.. அதை வைத்து, பிஎம் கிசான் வெப்சைட்டில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில், பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் வெப்சைட்டில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
அல்லது, உங்களது போனிலேயே ஆன்லைனில், http://pmkisan.gov.in என்ற வெப்சைட்டிற்கு சென்று, ஆதார் e-KYC என்ற பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். இது தொடர்பான கூடுதல் விவரம் ஏதாவது அறிய விரும்பினால் உங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications