டெல்லியில் பெரிய மரியாதை இல்லை.. எடப்பாடியை நம்பாத மோடி? "சீக்ரெட்டை" போட்டு உடைத்த எக்ஸ்பர்ட்
எடப்பாடிக்கு 15 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே வாங்க முடியும் என்று டெல்லி நினைக்கிறது.
சென்னை: எடப்பாடிக்கு டெல்லி பெரிய மரியாதை கொடுக்கவில்லை. அவருக்கு சீட் வாங்கும் திறன் இல்லை. அதனால் டெல்லி இவரை பெரிதாக நம்புவது இல்லை, என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பாக கேஎஸ் தென்னரசு போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் போட்டியிட்டார். 66575 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இங்கே மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் காங்கிரஸ் 64.6% வாக்குகளை வென்றுள்ளது. அதிமுக வெறும் 25.75% வாக்குகளை மட்டுமே வென்றுள்ளது. 1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 43,981 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
அதிமுகவின் இந்த படுதோல்வி குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் தனது பேட்டியில், அண்ணாமலை ஓ பன்னீர்செல்வத்தை பார்த்ததற்கு பின் அரசியல் இல்லை. ஓ பன்னீர்செல்வம் தாயாரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே அண்ணாமலை சென்றார். வெள்ளிக்கிழமை பார்க்க வேண்டியவர்., செவ்வாய்க்கிழமை பார்த்தார். ஓ பன்னீர்செல்வத்தை சில சந்தேகங்களை அண்ணாமலை தீர்த்து வைத்து இருக்கிறார். சாதி ரீதியாக எடப்பாடியை அண்ணாமலை ஆதரித்ததாக கூறப்பட்ட விஷயங்களுக்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். ஜாதி ரீதியாக கைகோர்த்தால் சரியாக இருக்காது என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமியால் 15 சதவிகித வாக்குகளை தாண்ட முடியாது. பாஜக இல்லையென்றால் வேறு கட்சிகளுடன் அவர் கூட்டணி வைக்க முடியாது. அதை எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும். விசிக, கம்யூனிஸ்டுகள் எல்லாமே அதிமுக கூட்டணிக்கு வர மாட்டார்கள். அதிமுகவுடன் கூட்டணியே இல்லை என்று திருமா வெளிப்படையாக சொல்லிவிட்டார். அப்படி என்றால் விசிக போன்ற கட்சிகளும் இல்லாமல், பாஜகவும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி எப்படி வெற்றிபெறுவார். ஈரோடு கிழக்கில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துவிட்டது. வெள்ளாள கவுண்டர்கள், வன்னியர்கள் பூத் இருக்கும் பகுதிகளில் அதிமுக லீட் எடுக்க முடியவில்லை. ஆனால் வேறுபாடு குறைவாக உள்ளது. பிற ஜாதியினர் இருக்கும் இடங்களில் அதிமுக மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதன் அர்த்தம் பிற சாதியினர் அதிமுகவை புறக்கணித்து உள்ளனர். அவர்கள் எடப்பாடியை ஏற்றுக்கொள்ளவில்லை.

என்ன சொன்னார்?
கருணாநிதி, ஜெயலலிதா போல மரியாதை எடப்பாடிக்கு இல்லை. அதனால்தான் பாஜகவும் எடப்பாடியை நம்ப மறுக்கிறது. எடப்பாடியால் சீட் வாங்க முடியவில்லை. அவரின் பலகீனம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது. 2026 லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் பலம் உண்மையில் தெரிய வரும். ஓ பன்னீர்செல்வம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியின் நிஜ பலம் என்னவென்று தெரியவரும். எடப்பாடியால் 15 சதவிகிதம் தாண்ட முடியாது. அது யுகம்தான். ஆனால் மோடி, அண்ணாமலை, அன்புமணி ஆகியோரும் இதே விஷயத்தைத்தான் நம்புகிறார்கள்.

தனியாக போட்டி
எடப்பாடி 2026ல் தனியாக போட்டியிட்டு 15 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகளை வாங்க வேண்டும். அவர் தன்னை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபணம் செய்தால் எடப்பாடி பழனிசாமி வேண்டுமானால் பெரிய ஆள் என்று சொல்லலாம். எடப்பாடிக்கு டெல்லி பெரிய மரியாதை கொடுக்கவில்லை. அவருக்கு சீட் வாங்கும் திறன் இல்லை. அதனால் டெல்லி இவரை பெரிதாக நம்புவது இல்லை. டெல்லி இவரை பெரிய தலைவர் என்ற அந்தஸ்தில் பார்க்கவில்லை. 15 சதவிகிதம் வாக்குகளை பெற கூடியவர் என்று மட்டும் பார்க்கிறார்கள். எடப்பாடி தனியாக நின்றால் ஜாதி ரீதியாக அவர் வீழ்த்தப்படுவார் என்பதை மறக்க வேண்டாம், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications