உலகத் தரம்.. அப்டேட் ஆகும் 34 தமிழ்நாடு ரயில் நிலையங்கள்! திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்தும் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

'அம்ருத் பாரத் ரயில் நிலையம்' திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இருக்கும் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. ரயில் நிலைய வளாகங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைஃபை, லிஃப்ட், எலவேட்டர், காத்திருப்பு அறை, உள்ளூா் தயாரிப்புகளை முன்னிலைப்படுத்தும் 'ஒரு நிலையம்; ஒரு தயாரிப்பு' வசதிகள் போன்றவை இந்த ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 1,318 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.

PM Modi is going to start the work of upgrading 34 railway stations in Tamil Nadu

அதன்படி கடந்த ஆண்டு 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணிகளை முதல்கட்டமாக பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். இந்த நிலையில், இன்று 2 ஆம் கட்டமாக 554 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களில் தமிழ்நாட்டின் ரயில் நிலையங்களும் உள்ளன. குறிப்பாக தெற்கு ரயில்வே சாா்பில் தமிழ்நாட்டில் 32 ரயில் நிலையங்களும், தென்மேற்கு ரயில்வே சாா்பில் தருமபுரி, ஒசூா் ஆகிய 2 ரயில் நிலையங்கள் என மொத்தம் 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன.

சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்களும் இந்த திட்டத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ.270 கோடியிலும், கும்பகோணம் ரயில் நிலையம் ரூ.118 கோடியிலும் ஒரே கட்டமாக மேம்படுத்தப்பட இருக்கின்றன. மற்ற ரயில் நிலையங்களை பல கட்டங்களாக மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டங்களை தொடங்கி முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

சென்னை கோட்டம்: சென்னை கடற்கரை ரூ. 14.58 கோடி, கிண்டி ரூ. 13.50 கோடி, அம்பத்தூா் ரூ. 21.57 கோடி, மாம்பலம் ரூ. 14.70 சென்னை பூங்கா ரூ. 10.68 கோடி, பரங்கிமலை ரூ. 14.15 கோடி

மதுரை கோட்டம்: பழனி ரூ. 13.88 கோடி, திருச்செந்தூா் ரூ. 17.50 கோடி, அம்பாசமுத்திரம் ரூ. 10.81 கோடி, காரைக்குடி ரூ. 13.91 கோடி, கோவில்பட்டி ரூ. 12.72 கோடி, மணப்பாறை ரூ. 10.11 கோடி, புதுக்கோட்டை ரூ. 14.48 கோடி, ராமநாதபுரம் ரூ. 11.95 கோடி, ராஜபாளையம் ரூ. 11.70 கோடி, பரமக்குடி ரூ. 10.56 கோடி, திண்டுக்கல் ரூ. 22.85 கோடி, தூத்துக்குடி ரூ. 12.37 கோடி, திருநெல்வேலி ரூ. 270 கோடி, பாலக்காடு கோட்டத்தில் பொள்ளாச்சி ரூ. 10.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

திருச்சி கோட்டம்: திருவண்ணாமலை ரூ. 8.27 கோடி, திருவாரூா் ரூ. 8.69 கோடி, விருத்தாசலம் ரூ. 9.17 கோடி, கும்பகோணம் ரூ. 118 கோடி

சேலம் கோட்டம்: ஈரோடு ரூ. 38.09 கோடி, மேட்டுப்பாளையம் ரூ. 14.81 கோடி, மொரப்பூா் ரூ. 12.18 கோடி, பொம்மிடி ரூ. 11.54 கோடி, திருப்பத்தூா் ரூ. 13.88 கோடி, சின்ன சேலம் ரூ. 11.85 கோடி, நாமக்கல் ரூ. 13.28 கோடி, கோவை வடக்கு ரூ. 11.55 கோடி செலவில் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+