ஏவுகணை, டிரோன்.. முதல்முறையாக பாகிஸ்தான் பெயரை நேரடியாக குறிப்பிட்டு பேசிய மோடி.. அட்டாக்!
சென்னை: பொதுவாக பிரதமர் மோடி நேரடியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சமயங்களில் எல்லாம் பாகிஸ்தான் பெயரை குறிப்பிட்டது இல்லை. பாகிஸ்தான் பெயரை நேரடியாக குறிப்பிட்டு அவர் பேசியது இல்லை. ஆனால் இன்று தனது உரையில் பாகிஸ்தான் பெயரை பிரதமர் மோடி பயன்படுத்தினார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில், நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் குலைக்கும் முயற்சியாக பஹல்காம் தாக்குதல் நடந்தது நாட்டையே உலுக்கிய அந்த தாக்குதலில் அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன. அந்த தாக்குதல் என்னை தனிப்பட்ட வகையில் உலுக்கியது. என்னை கவலையில் ஆழ்த்தியது.
கடந்த சில நாட்களில் நாட்டின் திறமையையும் பொறுமையையும் நாம் அனைவரும் கண்டோம். ஆயுதப்படைகள், ராணுவம், உளவுத்துறை மற்றும் விஞ்ஞானிகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். நான் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்தேன். தாக்குதல் நடத்த அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன்.

இன்று, இந்த வீரம், துணிச்சல், ஆயுதப் படைகளின் தைரியத்தை நமது நாட்டின் ஒவ்வொரு தாய்க்கும், நாட்டின் ஒவ்வொரு சகோதரிக்கும், நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் அர்ப்பணிக்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல. நாட்டு மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு மற்றும் அது நீதியை வழங்குவதற்கான உத்தரவாதம்
ஏப்ரல் 22 அன்று, பஹல்காமில், பயங்கரவாதிகள் காட்டிய காட்டுமிராண்டித்தனம் நாட்டையும் உலகையும் உலுக்கியுள்ளது. இயற்கையை கொண்டாடிக் கொண்டிருந்த அந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் மதம் குறித்து கேட்ட பிறகு, அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா தன்னுடைய எதிர்ப்பையும், பலத்தையும் முழுமையாக காட்டியுள்ளது
பாகிஸ்தானில் நேரடியாக தாக்குதல் நடத்தினோம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் பயிற்சி மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா இப்படி ஒரு முடிவை எடுக்கும் என பயங்கரவாதிகள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். டிரோன்கள் ஏவுகணைகள் மூலம் நாங்கள் தாக்குதல் நடத்தினோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை ஆதரிக்காமல், இந்தியாவை தாக்கியுள்ளது பாகிஸ்தான் நமது பள்ளி, கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், வீடுகள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்கியுள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியா அழித்ததை உலகமே பார்த்தது. பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டும் பயங்கரவாத இயக்க தலைவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தனர். ஒரே தாக்குதலில் அவர்களை இந்தியா அகற்றியுள்ளது. நண்பர்களே, இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிருப்தி, விரக்தி அடைந்துள்ளது.
இப்படி ஒரு முடிவை இந்தியா எடுக்கும் என பயங்கரவாதிகள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். 100-க்கும் அதிகமான தீவிரவாதிகளை ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாம் அழித்தோம். துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு நீதி வழங்க ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையாக நின்றது. பாகிஸ்தான் எதிர்பார்க்காத வகையில் அங்கு பலத்த சேதத்தை இந்தியா கொடுத்துள்ளது. அதனால்தான், இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது.
பாகிஸ்தானில் இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியபோது, பயங்கரவாத அமைப்புகளின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவர்களின் தைரியமும் நடுங்கியது. பவல்பூர் மற்றும் முரிட்கே போன்ற பயங்கரவாத தளங்கள் உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்தன. 9/11 மற்றும் இந்தியாவில் நடந்த பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட உலகில் நடந்த அனைத்து பெரிய பயங்கரவாத தாக்குதல்களும் இந்த பயங்கரவாத தளங்களுடன் தொடர்புடையவை, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications