5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் சென்னையின் ஹீரோ.. மோடி புகழாரம்
டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வண்ணாரப்பேட்டை டாக்டர் ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஏழை மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்டவர் டாக்டர் ஜெயச்சந்திரன்.
5 ரூபாய் கட்டணத்தை தாண்டி இதுவரை யாரிடமும் அவர் பணம் வாங்கியதே இல்லை. இதனால் பொதுமக்களின் நன்மதிப்பை எளிதாக பெற்றதுடன், அதனை கடைசிவரை தக்க வைத்தும் கொண்டார்.

அஞ்சலி
அவரது இறுதி ஊர்வலத்தில் அப்பகுதி மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். பலர் கதறி அழுதவாறே மாலைகளை வழிநெடுகிலும் போட்டுகொண்டு சென்றனர்.

டாக்டர் ஹீரோ
அவரது மறைவிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், பிரதமர் மோடியும் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "டாக்டர் ஜெயச்சந்திரன் ஹீரோ என்றும் பிறரின் நலனுக்காக தூய்மையான வாழ்வை அர்ப்பணித்தவர் மருத்துவர் ஜெயச்சந்திரன்" என்றும் அவர் கூறியுள்ளார்" என்றும் பதிவிட்டுள்ளார்.

5 மாநில தேர்தல்
எத்தனையோ பேர் தமிழகத்தில் கொத்து கொத்தாக இறந்து போனாலும் பெரும்பாலும் ரியாக்ஷன் காட்டாத பிரதமர் மோடி, 5 ரூபாய் டாக்டர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் இப்படியெல்லாமா ஒருவரை மாற்ற வைக்கும் என்றும் கேள்வி எழுகிறது.
|
கண்ணீர் இரங்கல்
தமிழகத்தில் அவருக்கு எதிர்ப்புகள் இருப்பது என்னவோ உண்மைதான், அதனை உடைத்தெறிவதற்காக அடுத்த மாதம் தமிழகம் வருகை, கண்ணீர் இரங்கல் என மோடியின் நடவடிக்கைகள் வியப்பை தருகிறது. தமிழகத்தில் பாஜக ஓட்டு வாங்க வேண்டும் என்பதையும் தாண்டி, வண்ணாரப்பேட்டையிலும் பாஜக கொடி பறக்க நினைக்கும் பிரதமர் மோடியின் மாற்றத்தை என்னவென்று சொல்வது?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications