செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு மிகச் சிறப்பாக நடத்தியது.. மனமார பாராட்டிய பிரதமர் மோடி!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு மிகச் சிறப்பாக நடத்தியுள்ளதாக பிரதமர் மோடி மனமார பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
உலகெங்கிலும் இருந்து போட்டியில் பங்கேற்றவர்களை வரவேற்று நமது மகத்தான கலாச்சாரத்தையும், விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு தனது பாராட்டுக்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டிய நிலையில், தமிழக அரசை அவர் பாராட்டியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

செஸ் ஒலிம்பியாட்
2022-ஆம் ஆண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியை, உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. எனவே இந்தப் போட்டியைத் தங்கள் நாடுகளில் நடத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த முயற்சிகளை மேற்கொண்டது. இதனிடையே அந்த தருணத்தில் தமிழக அரசு எடுத்த சில துரித நடவடிக்கைகளால் மற்ற மாநிலங்களை புறந்தள்ளி அந்த வாய்ப்பு சென்னைக்குக் கிடைத்தது.

23 குழுக்கள்
இதையடுத்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த 23 குழுக்கள் அமைத்து உத்தரவிட்ட முதல்வர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாள் தவறாமல் கேட்டறிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி நேற்று முன் தினத்துடன் போட்டி நிறைவடைந்தது. எந்தவித சிறு குறைகளோ, புகார்களோ, சலசலப்புகளோ ஏற்படாத வண்ணம் போட்டியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தது தமிழக அரசு.

பிரதமர் பாராட்டு
இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச்சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து போட்டியில் பங்கேற்றவர்களை வரவேற்று நமது மகத்தான கலாச்சாரத்தையும், விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்.'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

அரசியல் ரீதியாக
செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தமிழக அரசை அவர் மனமார பாராட்டியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications